அரசு பேருந்தில் கட்டுக் கட்டாக சிக்கிய ‘ஹவாலா பணம்’ – ஒருவர் கைது!

 

அரசு பேருந்தில் கட்டுக் கட்டாக சிக்கிய ‘ஹவாலா பணம்’ – ஒருவர் கைது!

தமிழக-கேரள எல்லையான அமரவிளை பகுதியில் கேரள மதுவிலக்கு போலீசார் வழக்கம் போல சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அந்த வழியே வந்த அரசு பேருந்து ஒன்றிலும் சோதனை நடந்திருக்கிறது. பேருந்தில் இருந்து அனைவரிடமும் சோதனை நடந்த நிலையில், சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரிடம் நடத்திய சோதனையில் கட்டுக் கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.20 லட்சம் பணம் இருந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பேருந்தில் கட்டுக் கட்டாக சிக்கிய ‘ஹவாலா பணம்’ – ஒருவர் கைது!

இதனையடுத்து அந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியை சேர்ந்தவர் என்றும் பெயர் ராஜீவ் (49) என்றும் தெரிய வந்துள்ளது. அதோடு, பணத்திற்கான எந்த ஆவணமும் அவரிடம் இல்லாததால் அது ஹவாலா பணம் என்பதும் கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு அவர் அந்த பணத்தை எடுத்துச் செல்வதும் அம்பலமாகியுள்ளது. இதையடுத்து ராஜீவை கைது செய்த போலீசார், அந்த பணத்தை யாரிடம் கொடுக்க சென்றார்? ராஜீவிடம் பணத்தை கொடுத்தது யார்? என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.