அன்று யாருடைய சடலத்தை எரித்தீர்கள்?….. ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் கேள்வி

 

அன்று யாருடைய சடலத்தை எரித்தீர்கள்?….. ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் கேள்வி

அன்று யாருடைய சடலத்தை எரித்தீர்கள் அது எங்களது சகோதரியின் உடல் என்றால் அப்புறம் ஏன் இந்த முறையில் அவளை எரித்தார்கள்? என ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கேட்டுள்ளனர்.

உத்தர பிரதேசம் ஹத்ராஸ் கிராமத்துக்கு உள்ளே செல்ல ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நேற்று விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து ஊடகங்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்தனர். அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அன்று யாருடைய சடலத்தை எரித்தீர்கள் என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். அது எங்களது சகோதரியின் உடல் என்றால் அப்புறம் ஏன் இந்த முறையில் அவளை எரித்தார்கள்? கடைசியாக ஒரு முறை அவளை பார்க்க அனுமதிக்கும்படி நாங்கள் காவல்துறையிடமும் மற்றும் நிர்வாகத்திடமும் கோரிக்கை விடுத்தோம்.

அன்று யாருடைய சடலத்தை எரித்தீர்கள்?….. ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் கேள்வி
ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர்

மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையை கேட்டோம் அதற்கு நீங்கள் ஆங்கிலம் படிக்க முடியாது என்பதால் அதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது என்று அவர்கள் சொன்னார்கள். கடந்த 2 தினங்களாக நாங்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. நாங்கள் இன்னும் பயத்தில் உள்ளோம். எங்களை கொஞ்சம் தனியாக இருக்க விடுங்கள் என போலீஸ்காரர்களிடம் கேட்டோம். அவர்கள் எப்போதுமே எங்கள் வீட்டில் இருந்தனர்.

அன்று யாருடைய சடலத்தை எரித்தீர்கள்?….. ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் கேள்வி
ஹத்ராஸ் கிராமம்

நிர்வாக அதிகாரிகள் வீட்டுக்கு வந்தார்கள், எங்களிடம் உங்களது செல்போனை காட்டும்படி கேட்டனர். கடைசி 2 நாட்களாக வெளிஉலகத்துடன் நாங்கள் கொண்டிருந்த ஒரே தொடர்பு இதுதான். கிராம அதிகாரிகளால் வழக்கை முடிக்கும்படி எங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இருப்பினும் நாங்கள் விரும்புவது நீதி மட்டுமே. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். உத்தர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் தலித் சமூகத்தை சேர்ந்த 19 வயது பெண் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகினாள். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவள் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அந்த பெண்ணின் உடலை போலீசாரே தகனம் செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் ஒருவர் கூட தகனம் நடந்த இடத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.