சந்திரனை அதிபதியாக கொண்ட நட்சத்திரம் – ஹஸ்தம் பொதுப் பலன்கள்

 

சந்திரனை அதிபதியாக கொண்ட நட்சத்திரம் – ஹஸ்தம் பொதுப் பலன்கள்

சந்திரனை அதிபதியாகக் கொண்ட நட்சத்திரங்களில் இரண்டாவது நட்சத்திரம் அஸ்தம் ஆகும்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் உற்சாகமாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். சுறுசுறுப்பாக இருக்கும் அதேநேரத்தில் மற்றவர்கள் மதிக்கும்படியாக நடந்து கொள்வார்கள். அஸ்த நட்சத்திரக்காரர்கள் காதல் திருமணம் செய்ய ஆசைப்படுவார்கள். அடிக்கடி கோபம் கொள்வார்கள். அடிக்கடி ஆழ்ந்த சிந்தனையில் இருப்பார்கள். எடுத்த காரியத்தை முடிப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள்.

சந்திரனை அதிபதியாக கொண்ட நட்சத்திரம் – ஹஸ்தம் பொதுப் பலன்கள்

முக்கியமான விஷயங்களை வாழ்க்கைத் துணையுடன் ஆலோசித்து முடிவெடுப்பார்கள். ஆக அவர்களுக்கும் வாழ்க்கையில் சம உரிமை கொடுப்பார்கள். அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நகைச்சுவை உணர்வு ஜாஸ்தி. அதனால் இவர்களை சுற்றி ஒரு கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். எல்லா தரப்பினரிடமும் பேதமில்லாமல் பழகுவார்கள். இவர்களுக்கு இசையில் ஆர்வம் அதிகம். சாஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். அனாவசியமாக மற்றவர்கள் விஷயத்தில் தலையிடமாட்டார்கள். எதிரிகளை வெல்வதில் வல்லவர்கள்.