தமிழருவி மணியன் இத்தனை கட்சிகள் மாறியிருக்கிறாரா? இன்னும் எத்தனையோ?

 

தமிழருவி மணியன் இத்தனை கட்சிகள் மாறியிருக்கிறாரா? இன்னும் எத்தனையோ?

தமிழகத்தில் தமிழருவி மணியன் பேசாத மேடைகளே இல்லை என்று சொல்லி விடலாம். அந்தளவுக்கு மேடைப் பேச்சில் புகழ்பெற்றவர்கள். கம்பரையும் பேசுவார்; காமராஜரையும் பேசுவார். ஈழத்தமிழர் விவகாரம் குறித்து உணர்வுபூர்வமாக இவர் பேசிய பேச்சுகள் இன்னும் முக்கியமான பதிவுகளாக இருந்து வருகின்றன.

கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி அரசியலை விட்டே விலகுகிறேன் என்று அதிரடி முடிவெடுத்தார். அதற்கு காரணம், ரஜினி கட்சி தொடங்குவார் என்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகச் சொல்லி வந்தார். ரஜினியும் தம் கட்சியின் மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் என்றும் அறிவித்தார். அதற்கு பிறகுதான் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும், அவர் கட்சி தொடங்க வில்லை என்று அறிவித்ததும் நடந்தன.

தமிழருவி மணியன் இத்தனை கட்சிகள் மாறியிருக்கிறாரா? இன்னும் எத்தனையோ?

இந்நிலையில் ரஜினிக்காக தாம் செய்த பணிகளை வைத்து பலரும் கிண்டல் செய்வதால் இறக்குவரை அரசியலுக்கே வர மாட்டேன் என்று அறிக்கை விட்டார் தமிழருவி மணியன். சிலருக்கு இது அதிர்ச்சி என்றாலும், பலரும் இந்த நிலைப்பாட்டில் ரொம்ப நாள் இருக்கமாட்டார் என்று சரியாகக் கணித்தார். சரியாக பத்து நாட்கள் முடிவடைந்த நிலையில் மீண்டும் காந்திய மக்கள் இயக்கம் சார்பாக அரசியல் விழாவில் கலந்துகொண்டு விட்டார்.

மீண்டும் அரசியலில் ஈடுபடுவார் என்று பலர் கணித்ததன் பின்னணி ஒன்றுதான். தமிழருவி மணியன் நிலைபாடுகள் மட்டுமல்ல, அவர் இருந்த கட்சிகளும் கணக்கில் அடங்காதவை.

தமிழருவி மணியன் இத்தனை கட்சிகள் மாறியிருக்கிறாரா? இன்னும் எத்தனையோ?

தமிழருவி மணியின் அடிப்படையில் பள்ளி ஆசிரியர். பிறகு படித்து வழக்கறிஞராகவும் பணியாற்றினார். கல்லூரியில் படிக்கையில் இந்தி எதிர்ப்பு போராடங்களில் பங்கேற்றவர். காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த காமராசரின் தொண்டுகளால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் கட்சிக்குள் வந்தார். அதனால்தான் இன்றுவரை காமராஜரைப் போல நேர்மையாக இருக்கிறேன் என்று சொல்லிகொள்வார்.

காமராஜர் மறைவு தமிழருவி மணியனுக்கு பெரும் இழப்பைத் தந்தது. அதனால், காங்கிரஸ் கட்சிக்குள் அவரால் நீடிக்க முடியவில்லை. அதனால், முற்போக்கு சிந்தனை கொண்ட வி.பி.சிங் தலைமையிலான ஜனதா கட்சியில் சேர்ந்துகொண்டார். இதுதான் அவர் முதன்முதலாக மாற்றுக் கட்சிக்கு சென்றது.

ஜனதா கட்சியிலும் தமிழருவி மணியனால் தொடர்ந்து பணியாற்ற முடியாத சூழல் வந்தது. அந்த நேரத்தில்தான் ராமகிருஷ்ண ஹெக்டே ‘லோக் சக்தி’ புதிய கட்சி தொடங்கினார். ஹெக்டே ஜனதா தள கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். அதில் ஏற்பட்ட பிளவினாலே இவர் கட்சித் தொடங்கினார். அந்தக் கட்சியின் தமிழ்நாட்டின் பொறுப்பேற்றார் தமிழருவி மணியன். இது இரண்டாம் கட்சி தாவல்.

தமிழருவி மணியன் இத்தனை கட்சிகள் மாறியிருக்கிறாரா? இன்னும் எத்தனையோ?

காமராஜரைத் தோற்கடித்த கட்சி திமுக என்பதால் திராவிடக் கட்சிகள் மீது கடும் வெறுப்பு தொடக்கம் முதலே தமிழருவி மணியனுக்கு உண்டு. ஆனால், காங்கிரஸ் மீதான ஈர்ப்பு எப்போதும் அவரிடமிருந்து விலகியதில்லை. அதனால், காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் கூட்டணி என முடிவுக்கு வந்தபோது மூப்பனார் தனியாகப் பிரித்து தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார். அப்போது தமிழருவி மணியனும் அதில் சேர்ந்துகொண்டார். இது மூன்றாவது கட்சி.

காங்கிரஸ்க்கும் தமாகாவுக்கும் உள்ள பிணக்குகள் கால ஓட்டத்தில் நீர்த்துப்போயின. ஏனெனில், அதிமுகவோடு தமாகாவே கூட்டணி வைத்துக்கொள்ளும் சூழல் வந்தது. அதனால், தமாகா கட்சி காங்கிரஸோடு இணைக்கப்பட்டது. அப்போது அதிலிருந்து தமிழருவி மணியனும் காங்கிரஸில் சேர்ந்தார். இது நான்காம் கட்சி.

தமிழருவி மணியன் இத்தனை கட்சிகள் மாறியிருக்கிறாரா? இன்னும் எத்தனையோ?

காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வந்தாலும் ஈழப்போருக்கு காங்கிரஸ் உதவி செய்வதாகச் சொல்லி காங்கிரஸிலிருந்து விலகினார். அதன்பின் அவரே ஆரம்பித்த இயக்கம்தான் காந்திய மக்கள் இயக்கம். ரஜினி கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் அறிவிக்கப்பட்டார். இது அவரின் ஐந்தாம் கட்சி.

சென்ற மாதம்தான் காந்திய மக்கள் இயக்கத்தை ரஜினி கட்சியோடு சேர்ப்பேன் என்று அறிவித்திருந்தார். ஆனால், அதற்கு தேவையில்லாத சூழலை ரஜினி உருவாக்கி விட்டார். ஆம். ரஜினியே கட்சி ஆரம்பிக்கும் முடிவிலிருந்து விலகி விட்டார்.

தமிழருவி மணியன் இத்தனை கட்சிகள் மாறியிருக்கிறாரா? இன்னும் எத்தனையோ?

இடையில் மக்கள் நலக்கூட்டணிக்காக வைகோவை முதல்வராக்குவேன் என்று பேசிய கதையெல்லாம் வேறு தனியாக இருக்கிறது. இப்படியான பின்னணி இருப்பதால்தான் தமிழருவி மணியன் அரசியலை விட்டு விலகுவேன் என்பதை பலரும் நம்பவில்லை.