“டாய்லெட்டுக்குள் அடைத்து வைத்து டார்ச்சர் செய்தார்கள்” -ஒரு வருடத்திற்கு பின் போலீசால் மீட்கப்பட்ட பெண்

“டாய்லெட்டுக்குள் அடைத்து வைத்து டார்ச்சர் செய்தார்கள்” -ஒரு வருடத்திற்கு பின் போலீசால் மீட்கப்பட்ட பெண்

கட்டிய மனைவியை மன நிலை சரியில்லாதவர் என்று முத்திரையிட்டு ஒரு வருடமாக கழிவறையில் அடைத்து வைத்திருந்ததையறிந்து அந்த பெண்ணை போலீசார் மீட்டனர்.

“டாய்லெட்டுக்குள் அடைத்து வைத்து டார்ச்சர் செய்தார்கள்” -ஒரு வருடத்திற்கு பின் போலீசால் மீட்கப்பட்ட பெண்

ஹரியானா மாநிலம் ரிஷ்பூர் கிராமத்தில் ஒரு 35 வயது பெண் திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தாயானவர் .அவரை அவரின் கணவர் மன நிலை சரியில்லாதவர் என்று ஒதுக்கி வீட்டின் கழிப்பறைக்குள் அடைத்து வைத்திருந்தார் .அப்போது அவருக்கு உணவு ,தண்ணீர் எதுவும் வழங்காமல் கொடுமைகள் செய்து வந்தனர் .இதனால் அந்த பெண்ணின் நிலை பற்றி அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்கள் .
போலீஸ் படை விரைந்து வந்து , வீட்டிற்குள் நுழைந்து பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை அந்த கழிவறை யிலிருந்து மீட்டார்கள் .அப்போது அந்த பெண்ணுக்கு போலீசார் உணவளித்தபோது அவர் பசியின் கொடுமையால் எட்டு சப்பாத்திகள் சாப்பிட்டதாக கூறினார்கள் .
மேலும் அந்த பெண்னின் கணவரிடம் இந்த கொடுமை பற்றி விசாரித்த போது அவர் தன்னுடைய மனைவிக்கு மன நிலை சரியில்லை என்று கூறினார் .அதனால்தான் அவரால் மற்றவருக்கு பாதிப்பு ஏற்படாமலிருக்க கழிவரையில் அடைத்து வைத்திருந்ததாக கூறினார்கள் .ஆனால் போலீசார் அந்த பெண்ணிடம் பேசிய போது அவர் நல்ல மன நிலையில் இருப்பதை கண்டறிந்தார்கள் .பிறகு போலீசார் சில சமூக தொண்டு நிறவனங்களிடம் அந்த பெண்ணை ஒப்படைத்தனர் .அவர்கள் அந்த பெண்ணை குளிப்பாட்டி ,புத்தாடைகள் அணிவித்து பாதுகாப்பாக அழைத்து சென்றார்கள் .
மேலும் போலீசார் இந்த கொடுமைகளை அந்த பெண்ணுக்கு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகிறார்கள் .

“டாய்லெட்டுக்குள் அடைத்து வைத்து டார்ச்சர் செய்தார்கள்” -ஒரு வருடத்திற்கு பின் போலீசால் மீட்கப்பட்ட பெண்