கொரோனா வைரஸ் பரவல் தீவிரம்.. ஹரியானாவில் இன்று முதல் 7 நாட்களுக்கு லாக்டவுன்

 

கொரோனா வைரஸ் பரவல் தீவிரம்.. ஹரியானாவில் இன்று முதல் 7 நாட்களுக்கு லாக்டவுன்

ஹரியானாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து, அம்மாநிலத்தில் மே 3ம் தேதி (இன்று) முதல் 7 நாட்களுக்கு லாக்டவுன் அமலுக்கு வருவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2வது அலை தீவிரமாக உள்ளது. ஹரியானா மாநிலமும் கொரோனாவின் பார்வையில் இருந்த தப்பவில்லை. கடந்த சனிக்கிழமையன்று ஹரியானாவில் புதிதாக 13,588 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனையடுத்து அந்த மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5.01 லட்சமாக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் தீவிரம்.. ஹரியானாவில் இன்று முதல் 7 நாட்களுக்கு லாக்டவுன்
கொரோனா வைரஸ்

மேலும் ஹரியானாவில் கடந்த சனிக்கிழமையன்று மட்டும் கொரோனாவால் 125 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த வெள்ளிக்கிழமையன்று குருகிராம், பரிதாபாத் உள்பட 9 மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் மே 3ம் தேதி காலை 5 மணி வரை இரவு ஊரடங்கை அமல்படுத்தியது. தற்போது கொரோனா தீவிரமாக பரவதை கருத்தில் கொண்டு ஹரியானா முழுவதும் இன்று முதல் 7 நாட்களுக்கு லாக்டவுன் அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் தீவிரம்.. ஹரியானாவில் இன்று முதல் 7 நாட்களுக்கு லாக்டவுன்
அனில் விஜ்

இது தொடர்பாக ஹரியானாவின் உள்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் நேற்று டிவிட்டரில், மே 3 முதல் முழு மாநிலத்திலும் 7 நாள் நீண்ட லாக்டவுன் இருக்கும் என பதிவு செய்து இருந்தார். கொரோனா காரணமாக பல மாநிலங்கள் லாக்டவுனை அமல்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. டெல்லி அரசு கடந்த சில தினங்களுக்கு முன் லாக்டவுனை மேலும் ஒரு வாரம் நீட்டித்தது குறிப்பிடத்தக்கது.