சூரிய கிரகணம் கண்காட்சி ரத்து : ஹரியானா முதல்வர் அறிவிப்பு!

 

சூரிய கிரகணம் கண்காட்சி ரத்து :  ஹரியானா முதல்வர் அறிவிப்பு!

வருகிற ஜூன் 21 அன்று இந்தாண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணத்தை ஆப்பிரிக்கா, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ, எத்தியோப்பியா, பாகிஸ்தான், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உள்ளவர்களால் பார்க்க முடியும். அன்று காலை 9:15 முதல் மாலை 3:04 வரை என மொத்தம் 6 மணி நேரம் இந்த சூரிய கிரகணம் நிகழ உள்ளது.

சூரிய கிரகணம் கண்காட்சி ரத்து :  ஹரியானா முதல்வர் அறிவிப்பு!

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஹரியானா மாநில குருஷேத்திரத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட சூரிய கிரகணம் கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.  இது குறித்து அம்மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.