கொரோனா பரவல் காலத்தில் எவ்வாறு பாதுகாப்பாக உடலுறவு கொள்வது? – ஹார்வர்டு பல்கலைக்கழகம் அறிவுறுத்தல்

 

கொரோனா பரவல் காலத்தில் எவ்வாறு பாதுகாப்பாக உடலுறவு கொள்வது? – ஹார்வர்டு பல்கலைக்கழகம் அறிவுறுத்தல்

கொரோனா பரவல் காலத்தில் எவ்வாறு பாதுகாப்பாக உடலுறவு கொள்வது? என்பது பற்றி ஹார்வர்டு பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா தொற்றுநோய் பரவும் இந்நேரத்தில் பாதுகாப்பாக உடலுறவு கொள்வது பற்றி தங்கள் நோயாளிகளுக்கு எவ்வாறு ஆலோசனை வழங்குவது என்பது பற்றி அறிவுறுத்தும் ஒரு ஆய்வறிக்கையை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மூன்று மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி கொரோனா பரவலை தடுக்க ஒருவருடன் உடலுறவில் ஈடுபட்டால் முகமூடியை அணிய வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளனர்.

கொரோனா பரவல் காலத்தில் எவ்வாறு பாதுகாப்பாக உடலுறவு கொள்வது? – ஹார்வர்டு பல்கலைக்கழகம் அறிவுறுத்தல்

பொதுவாகவே தனிப்பட்ட பாலியல் உடலுறவின்போது வைரஸ் பரவுவதற்கான அபாயம் உள்ளன. கொரோனா காலத்தில் முதிர்ச்சியான பாலியல் நடத்தைகளை செய்ய வேண்டும். கொரோனா தொற்றுநோய் மல-வாய்வழி பரவும் அபாயம் இருப்பதால் அவற்றை தவிர்க்க வேண்டும்.

மேலும் விந்து மற்றும் சிறுநீர் சம்பந்தப்பட்ட பாலியல் நடத்தைகளை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. உடலுறவுக்கு பின்பு சோப்பு அல்லது ஆல்கஹால் கலந்த துடைப்பான் மூலம் (Wipes) அந்த பகுதியை துடைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பாலியல் செயல்பாடுகளில் பாதுகாப்பான அணுகுமுறை என்ற ஒன்று இல்லை  சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனினும், சுயஇன்பம் என்பது அதற்கான பாதுகாப்பான பாலியல் நடத்தைக்கு சிறந்த தீர்வாக இருக்கும் என்று கூறப்படுகிறது.