விவசாயம் கார்ப்பரேட் மயமா? வலுக்கும் எதிர்ப்பு- பதவி விலகிய அமைச்சர் !

 

விவசாயம் கார்ப்பரேட் மயமா? வலுக்கும் எதிர்ப்பு- பதவி விலகிய அமைச்சர் !

ரு துறையை மேம்படுத்துவதற்கு என கொண்டு வரப்படும் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த துறை சார்ந்த அமைச்சரே பதவி விலகியது உலகில் வேறு எங்கும் நடந்திருக்குமா தெரியவில்லை.. ஆனால் அப்படி ஒரு சர்ச்சை இந்திய நாடாளுமன்றத்தில் தற்போது நிகழ்ந்துள்ளது.

இந்திய விவசாயத் துறையை சீர்திருத்த என, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய மசோதாவை எதிர்த்து, உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் கவுர் பதவி விலகியது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

விவசாயம் கார்ப்பரேட் மயமா? வலுக்கும் எதிர்ப்பு- பதவி விலகிய அமைச்சர் !

அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சரே ஒரு மசோதாவை எதிர்க்கும் நிலை இருக்கிறது என்றால், விவசாயிகளின் நிலை என்னாவாகும் என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

புதிதாக கொண்டு வரப்படும் விவசாய மசோதா மூலம், விளைபொருளுக்கான விலையை இடைத்தரகர்கள் தீர்மானிக்கும் நிலையை மாற்றி, விவசாயிகளே விலையை தீர்மானிக்கலாம் என மத்திய அரசு தெரிவிக்கிறது. ஆனால் விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்கும் முயற்சி என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

விவசாயம் கார்ப்பரேட் மயமா? வலுக்கும் எதிர்ப்பு- பதவி விலகிய அமைச்சர் !

இந்த சட்டத்துக்கு ஆரம்பம் முதலே பாஜக கூட்டணி கட்சியான ஷிரோமணி அகாலி தளம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பஞ்சாப், ஹரியானாவில் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் எதிர்ப்புகள் வலுத்துள்ளன.

சட்ட மசோதா குறித்து மத்திய அரசு தரும் விளக்கத்தில், விவசாயத்தை முதுகெலும்பாக கொண்டுள்ள நாட்டில் 86% விவசாயிகள் இரண்டு ஹெக்டேருக்குள் நிலம் வைத்திருப்பவர்கள். ஆனால், அவர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கூட கிடைப்பதில்லை என்றும், விவசாயிகளின் நலனுக்காகவே இந்த மசோதா கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், “விளைபொருளுக்கு விலையை வர்த்தகர்கள் தீர்மானிக்கும் நிலையை மாற்றி விவசாயியே தங்களது விலை பொருளுக்கான விலையை தீர்மானிக்கலாம்” என்கிறார்.

விவசாயிகள் எதிர்ப்பு

விவசாயம் கார்ப்பரேட் மயமா? வலுக்கும் எதிர்ப்பு- பதவி விலகிய அமைச்சர் !


ஆனால் இந்த மசோதாவில் விவசாயிகளுக்கு கிடைக்கும் பலன் குறித்து எந்த தெளிவான முடிவும் இல்லை என்கின்றனர் எதிர்ப்பவர்கள். விவசாயிகளின் வணிக பகுதி, வர்த்தகர் என்பவர் யார்? பிரச்சினை என்றால் எங்கு தீர்வு காண்பது ? சந்தை நிலவரம் உள்ளிட்டவை ஏதும் குறிப்பிடப்படவில்லை. தவிர இ-சந்தை மூலம் விற்பனை உள்ளிட்டவையும், விவசாயிகளின் வருமானத்துக்கு கணக்கு உள்ளிட்டவையும் மசோதாவுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன என்கின்றனர்.

வர்த்தகப் பகுதிகளுக்குள் பொருட்கள் பரிமாற்றத்திற்கான சந்தைக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தும்போது, வருவாய் மத்திய அரசுக்கு செல்லும் என மாநிலங்கள் எதிர்க்கின்றன.

விவசாயம் கார்ப்பரேட் மயமா? வலுக்கும் எதிர்ப்பு- பதவி விலகிய அமைச்சர் !


புதிய மசோதாக்களால் விவசாயிகள், தங்களுக்கு உரிய விலையை பேரம் பேசுவது கட்டுப்படுத்தப்படுகிறது என்றும், மறைமுகமாக சந்தை வியாபாரத்தில் கார்பரேட்டுகள் நுழைய அரசு வழி வகை செய்கிறது என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த மசோதாவுக்கு பஞ்சாப், ஹரியான மாநில விவசாயிகளிடம் எழுந்த எதிர்ப்பு காரணமாக ஷிரோமணி அகாலி தளம் மத்திய அரசின் மசோதாவை எதிர்க்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளானது. பாஜகவுடன் நீண்ட கால கூட்டணியில் இருக்கும், அந்த கட்சி ஆரம்பத்தில் விவசாய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு வலுத்ததும், அந்த கோரிக்கைகளை கையில் எடுக்கவில்லை என்றால், கட்சியின் நிலைமை அதளபாதாளத்திற்கு செல்லும் என சுதாரித்து கொண்டு விவசாயிகளின் பக்கம் நின்றுள்ளது.

எதிர்ப்பும்… பதவி விலகலும்

விவசாயம் கார்ப்பரேட் மயமா? வலுக்கும் எதிர்ப்பு- பதவி விலகிய அமைச்சர் !


இதையடுத்துதான், சிரோமணி அகாலி தளம் கூட்டணி அமைச்சரவையில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய, சிரோமணி அகாலி தள தலைவர் சுக்பீர் சிங் பாதல், வேளாண் துறையை கட்டமைக்கும் முயற்சியில், கடந்த 50 ஆண்டுகளாக பஞ்சாப் மேற்கொண்ட கடின உழைப்பை, இந்த மசோதாக்கள் அழித்துவிடும் என்றார். இதை திரும்ப பெறாவிட்டால் உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சராக உள்ள தங்கள் கட்சியை சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்றும் தெரிவித்தார். இதையடுத்து அவரது மனைவியும் , மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் பதவி விலகினார்.

ஹர்சிம்ரத் கவுர் கூறுகையில், விவசாயிகளின் சகோதரியாகவும், மகளாகவும், அவர்களுடன் நிற்பதில் பெருமை கொள்வதாக கூறியுள்ளார். இந்த மசோதாவுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தின் நிலைபாடு

விவசாயம் கார்ப்பரேட் மயமா? வலுக்கும் எதிர்ப்பு- பதவி விலகிய அமைச்சர் !

விவசாய மசோதாவுக்கு பாஜக கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் மசோதா வாக்கெடுப்பின் போது அதிமுக ஆதரவாக வாக்களித்துள்ளது. திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதிமுக ஆதரவாக வாக்களித்த நிலையில், விவசாயிகளுக்கு அதிமுக இழைத்திருக்கும் துரோகம் என திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் விமர்சனம் செய்துள்ளனர்.

கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆலோசனை செய்திருக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன்சாமி தெரிவித்துள்ளார். ஆதரவு எதிர்ப்பு என்கிற நிலைகளைத் தாண்டி, விவசாயிகளின் நலனில் உண்மையான அக்கறையா அல்லது விவசாயம் கார்ப்பரேட் மயமாகுமா என்கிற அச்சத்தை போக்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்கிறனர் சமூக ஆர்வலர்கள்.

-மணிக்கொடி மோகன்