டெக்னாலஜியை தூக்கி சாப்பிடும் 4,500 ஆண்டு பழமையான “தோலாவிரா” – இந்திய பண்பாட்டு மகுடத்தில் பொறிக்கப்பட்ட மேலும் வைரக்கல்!

டெக்னாலஜியை தூக்கி சாப்பிடும் 4,500 ஆண்டு பழமையான “தோலாவிரா” – இந்திய பண்பாட்டு மகுடத்தில் பொறிக்கப்பட்ட மேலும் வைரக்கல்!

நம் முன்னோர்களின் வாழ்வியலைக் கண்டுபிடிப்பது நாம் வாழும் இந்தக் காலக்கட்டத்தில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அவர்களின் கட்டடவியல், வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம் என அவர்களின் வாழ்விலிருந்து அனைத்து அங்கங்களையும் தேடுவதற்காகத் தான் தொல்லியல் துறை என பிரத்யேக துறை மத்தியிலும் மாநிலங்களிலும் உருவாக்கப்பட்டுள்ளது. மனித நாகரிகத்தில் சிந்து சமவெளி நாகரிகம் இன்றியமையாத இடத்தைப் பிடித்துள்ளதை எவராலும் மறுக்க முடியாது.

டெக்னாலஜியை தூக்கி சாப்பிடும் 4,500 ஆண்டு பழமையான “தோலாவிரா” – இந்திய பண்பாட்டு மகுடத்தில் பொறிக்கப்பட்ட மேலும் வைரக்கல்!

இந்தியாவில் மட்டுமல்லாது உலகின் மிகப் பழமையான நாகரிகம் சிந்துசமவெளி நாகரிகம் போற்றப்படுகிறது. ஆனால் இதை விட தமிழ் நாகரிகம் முன்னோடி என்பதற்கான தரவுகளும் ஆதாரங்களும் கீழடி உள்ளிட்ட தமிழ்நாட்டின் அகழ்வாராய்ச்சி பகுதிகளில் காணக் கிடைக்கின்றன. சிந்துசமவெளி நாகரிக மக்கள் இந்தியாவின் பல பகுதிகளிலும் பரந்து விரிந்து வாழ்ந்து வந்திருக்கின்றனர். இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் மொகஞ்சாதாரோ நகரமும் ஹரப்பா நகரமும் அதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

டெக்னாலஜியை தூக்கி சாப்பிடும் 4,500 ஆண்டு பழமையான “தோலாவிரா” – இந்திய பண்பாட்டு மகுடத்தில் பொறிக்கப்பட்ட மேலும் வைரக்கல்!

குஜராத்த்தையொட்டியுள்ள இந்த நகரங்களில் மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்களும், அவர்கள் பயன்படுத்திய பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை பாகிஸ்தான் பகுதிகளிலிருந்தாலும் ஒருங்கிணைந்த இந்தியப் பகுதிகளில் வாழ்ந்த மக்களின் வாழ்வியலையே இங்கு நடைபெறும் தொல்லியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. அதேபோல குஜராத்திலுள்ள தோலாவிரா நகரிலும் லோத்தல் நகரிலும் சிந்துசமவெளி மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டன. இன்றைய காலக்கடத்துடன் போட்டி போடும் வகையில் நவீன பண்பாட்டுடன் சிந்துசமவெளி மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதற்கு தோலாவிராவும் லோத்தலும் சாட்சியாக இருக்கின்றன.

டெக்னாலஜியை தூக்கி சாப்பிடும் 4,500 ஆண்டு பழமையான “தோலாவிரா” – இந்திய பண்பாட்டு மகுடத்தில் பொறிக்கப்பட்ட மேலும் வைரக்கல்!

இச்சூழலில் தோலாவிராவை உலக பாரம்பரிய சின்னமாக ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான (UNESCO) யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இது 4,500 ஆண்டுகளுக்கு முந்தையை பண்பாட்டு நாகரிகம் இருந்த இடமாக திகழ்கிறது. இந்தியாவின் இரண்டு பெரிய ஹரப்பன் தளங்களில் இதுவும் ஒன்றாகும். கிமு 2900 முதல் கிமு 1500 வரையிலான ஹரப்பா கலாச்சாரம் இருந்ததை உறுதிப்படுத்தும் இந்திய துணைக்கண்டத்தின் 5ஆவது பெரிய இடமாகக் கூறப்படுகிறது. 1968ஆம் ஆண்டு இதனை கண்டுபிடித்து தொல்லியல் துறை உலகிற்கு காட்சிப்படுத்தியது.

டெக்னாலஜியை தூக்கி சாப்பிடும் 4,500 ஆண்டு பழமையான “தோலாவிரா” – இந்திய பண்பாட்டு மகுடத்தில் பொறிக்கப்பட்ட மேலும் வைரக்கல்!

நீர் மேலாண்மை அமைப்பு, பல அடுக்கு பாதுகாப்பு வழிமுறைகள், கட்டுமானத்தில் கற்களின் விரிவான பயன்பாடு, உடல்களை அடக்கம் செய்யும் கட்டமைப்புகள் போன்றவை தனித்துவமாக இருக்கின்றன. இன்றைய நகரத்துடன் தொடர்புடைய கைவினைக்கலைப் பொருட்களும் கவனிக்கத்தக்கது. செம்பு, விலைமதிப்பற்ற கற்கள் பதிக்கப்பட்ட நகைகள், தங்கம் போன்ற பல்வேறு வகையான கலைப்பொருட்கள் இந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடங்கள் பட்டியலில் தோலவிரா 40ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதற்கு முன்னர் ஜூலை 25ஆம் தேதி தெலங்கானாவில் ராமப்பா கோவில் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைச் சிறப்பித்து பிரதமர் மோடி பேசியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்களில், “இந்தச் செய்தியைக் கேட்டு நான் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். பண்டைய காலங்களில் தோலாவிரா ஒரு முக்கியமான நகர மையமாக இருந்துள்ளது. இது நமது கடந்த காலத்துடன் நம்மை இணைக்கும் மிக முக்கியமான தளங்கலில் ஒன்றாகும். இது வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொல்பொருளியல் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய பண்டைய நகரம்” என்று குறிப்பிட்டுள்ளார்.