திருச்சி விமான நிலையத்தை தனியார் மயமாக்க முடிவு – அமைச்சர் ஹர்திக் சிங்

 

திருச்சி விமான நிலையத்தை தனியார் மயமாக்க முடிவு – அமைச்சர் ஹர்திக் சிங்

ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை மீட்க ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 நாட்களாக அறிவித்து வருகிறார். இன்றைய அறிவிப்பில்  மத்திய அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுமே தனியார் மயமாக்கப்படும் என்று அறிவித்திருந்தார். தேசிய அளவில் முக்கியத்துவம் இல்லாத அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் இனி தனியார்மயமாக்கப்படும் என நிர்மலா சீதாராமன் கூறினார்.

திருச்சி விமான நிலையத்தை தனியார் மயமாக்க முடிவு – அமைச்சர் ஹர்திக் சிங்

இந்நிலையில் முதற்கட்டமாக திருச்சி விமான நிலையத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ஹர்தீக் சிங் தகவல் அளித்துள்ளார். லக்னோ, குவாஹாத்தி, திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், அகமதாபாத் ஆகிய விமான நிலையங்களும் தனியார் மயமாக்கப்படுகிறது. வாரணாசி, இந்தூர், புவனேஸ்வர், ராய்ப்பூர் உள்ளிட்ட மேலும் 6 விமான நிலையங்கள் தனியார்மயமாக்கப்படும் என ஹர்தீக் சிங் தெரிவித்திருக்கிறார்.