மீண்டும் வெற்றி முகம் காணும்போது அடிக்கும் அடி சம்பட்டி அடியாக இருக்கும்: ஹர்பஜன் சிங்

 

மீண்டும் வெற்றி முகம் காணும்போது அடிக்கும் அடி சம்பட்டி அடியாக இருக்கும்: ஹர்பஜன் சிங்

இன்றைய போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இடையே நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை ஐந்து போட்டிகளில் ஆடி, இரண்டில் மட்டும் வெற்றியும் மூன்றில் தோல்வியும் கண்டிருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 போட்டிகளில் ஆடி, 2-ல் வென்று 2-ல் தோற்றிருக்கிறது. இதனால் புள்ளி பட்டியலில் முன்னேற இன்றைய போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 157 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

மீண்டும் வெற்றி முகம் காணும்போது அடிக்கும் அடி சம்பட்டி அடியாக இருக்கும்: ஹர்பஜன் சிங்

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், “இ(எ)துவும் கடந்து போகும் என்னுடைய தோல்வியை ஒரு கூட்டமே கொண்டாடுகிறது ஆனால் என்னுடைய வெற்றியை ஒரு இனமே கொண்டாடும் என்பதை மறக்க வேண்டாம். மீண்டு வெற்றி முகம் காணும் போது அடிக்கும் அடி சம்பட்டி அடி ஆக இருக்கும் @ChennaiIPL திரும்பி வருவதை @IPL சரித்திரம் பேசும் #KKRvCSK #csk” என பதிவிட்டுள்ளார்.C