சுகர் பேஷன்டின் சந்தோஷத்துக்கு தொல்லையாக இருக்கும் இந்த வெள்ளை பொருட்கள்

 

சுகர் பேஷன்டின் சந்தோஷத்துக்கு தொல்லையாக இருக்கும் இந்த வெள்ளை பொருட்கள்

சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் என்ன என்பதை தற்போது தெரிந்து கொள்வோம்.

வெள்ளை பிரட், வெள்ளை அரிசி, பாஸ்தா, பேக்கரி உணவுகள் மற்றும் ஸ்நாக்ஸ்கள் போன்ற உணவுகள் சுத்திகரிக்கப்பட்ட மாவில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகளை சர்க்கரை நோயாளிகள் அறவே தொடக்கூடாது. இவற்றில் உயர் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருப்பதால், அவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் மற்றும் மூளை செயல்பாட்டைக் குறைத்து சர்க்கரை நோயாளிகளுக்கு மனநல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

பழச்சாறுகளில் நார்ச்சத்துக்கள் நீக்கப்பட்டு, இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும் ஃபுருக்டோஸ் அதிகமாக நிறைந்திருக்கும். எனவே சர்க்கரை நோயாளிகள் பழச்சாறுகளைக் குடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

சுகர் பேஷன்டின் சந்தோஷத்துக்கு தொல்லையாக இருக்கும் இந்த வெள்ளை பொருட்கள்

தற்போது கடைகளில் விற்கப்படும் பெரும்பாலான யோகர்ட்டுகள் செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளதுடன், அதிக சர்க்கரையையும் கொண்டுள்ளன. எனவே சர்க்கரை நிறைந்த இம்மாதிரியான யோகர்ட்டுகளை சர்க்கரை நோயாளிகள் சுவைத்துப் பார்க்கக்கூட ஆசைப்படக்கூடாது.

நன்கு எண்ணெயில் பொரிக்கப்பட்ட ஃபிரெஞ்சு பிரைஸ் போன்ற உணவுகளில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் இருக்கும். இந்த உணவுகள் இரத்த சர்க்கரை அளவை தூண்டிவிட்டு, உடல் ஆரோக்கியத்தை பல்வேறு வழிகளில் பாதிக்கும். எனவே எக்காரணம் கொண்டும் எண்ணெயில் பொரித்தெரிக்கும் உணவுகளை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது

வாழைக்காய், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு ஆகிய காய்கறிகளை சக்கரை நோயாளிகள் தவிர்பது நல்லது. சக்கரை நோய் உள்ளவர்கள் தவிக்க வேண்டிய பழ வகைகள்: சப்போட்டா, பலாப்பழம், மாம்பழம் ஆகிய பழ வகைகளை சக்கரை நோய் உள்ளவர்கள் முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. இது தவிர அதிக இனிப்புள்ள பழங்களையும் தவறது நல்லது.

 சக்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் சில மூலிகை வகைகள்: ஆவாரம் பூவை கூட்டு அல்லது பொரியலாக செய்து சாப்பிடலாம். அல்லது அந்த பூக்களை வேகவைத்து அந்த நீரை தேநீருக்கு பதிலாக பருகலாம். இதன் மூலம் சக்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். அதே போல தினமும் 100மி.லி அளவு அருகம்புல் சாறை அருந்தலாம் அல்லது கொத்தமல்லி சாறு, நெல்லிக்காய் சாறு, கறிவேப்பில்லை சாறு போன்றவற்றில் ஏதோ ஒன்றை தினமும் 100மி.லி அளவு அருந்தலாம்.