ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசை காப்பாற்ற முயற்சிக்கும் வசுந்தரா ராஜே… பா.ஜ.க. கூட்டணி கட்சி குற்றச்சாட்டு

ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசை காப்பாற்ற முயற்சிக்கும் வசுந்தரா ராஜே… பா.ஜ.க. கூட்டணி கட்சி குற்றச்சாட்டு

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் இடையிலான மோதலால் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க. தனது அரசை கவிழ்க்க முயற்சி செய்கிறது, தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதற்காக குதிரை பேரத்தில் பா.ஜ.க. ஈடுபடுகிறது என முதல்வர் அசோக் கெலாட் வெளிப்படையாக குற்றச்சாட்டினார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசை காப்பாற்ற முயற்சிக்கும் வசுந்தரா ராஜே… பா.ஜ.க. கூட்டணி கட்சி குற்றச்சாட்டு

இதனை ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. தலைவர்கள் மறுத்தனர். அந்த கட்சி தனது உட்கட்சி பூசலால் கவிழும் என பதிலடி கொடுத்தனர். ராஜஸ்தான் அரசியலில் இவ்வளவு பரபரப்பான சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையிலும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான வசுந்தரா ராஜே எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் அசோக் கெலாட் அரசை காப்பாற்ற வசுந்தரா ராஜே முயற்சி செய்கிறார் என பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி பகீா குற்றச்சாட்டை கூறியுள்ளது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசை காப்பாற்ற முயற்சிக்கும் வசுந்தரா ராஜே… பா.ஜ.க. கூட்டணி கட்சி குற்றச்சாட்டு

பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிக்கும் ராஷ்டிரிய லோகாந்த்ரிக் கட்சியின் எம்.பி. ஹனுமான் பெனிவால் இது தொடர்பாக டிவிட்டரில், பெரும்பான்மையை இழந்த அசோக் கெலாட் அரசை காப்பாற்ற முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தனது முயற்சியை செய்து செய்கிறார். இது தொடர்பாக பல காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அவர் அழைத்து பேசியுள்ளார் என பதிவு செய்துள்ளார். பெனிவால் குற்றச்சாட்டு தொடர்பாக வசுந்தரா ராஜே உடனடியாக எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதனால் பெனிவால் கூறியது உண்மைதானோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது.