ஆனைக்கட்டியில் 5 பசுமை வீடுகள் ஒப்படைப்பு: இதையே விரும்பும் 18 கிராம மலைவாழ் மக்கள்!

ஆனைக்கட்டியில் 5 பசுமை வீடுகள் ஒப்படைப்பு:  இதையே விரும்பும் 18 கிராம மலைவாழ் மக்கள்!

கோவை மாவட்டம் ஆனைக்கட்டியில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் மலைவாழ் மக்களுக்கு 5 வீடுகள் கட்டப்பட்டு பயனாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவை ஆனைகட்டி கண்டிவழி மலை கிராமத்தில் சுமார் 25 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு கோடை மழையின் போது பெரும்பாலான வீடுகள் சேதமடைந்தன. இதனை தொடர்ந்து அங்கு வசிக்கும் மக்கள் அருகில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

ஆனைக்கட்டியில் 5 பசுமை வீடுகள் ஒப்படைப்பு:  இதையே விரும்பும் 18 கிராம மலைவாழ் மக்கள்!

மழை காரணமாக பாதுகாக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டபோது பசுமை வீடுகள் கட்டி தர கோரி கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து 13 வீடுகள் கட்ட ஆணை பிறப்பிக்கபட்டது. இதனை தொடர்ந்து அரசு தரப்பில் வழங்கப்படும் இரண்டு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் வீதம் ஐந்து வீடுகளுக்கு நிதி ஒதுக்கபட்டது. 320 சதுர அடி கட்டிடத்திற்கு நான்கு லட்ச ரூபாய் மதிப்பில் கட்டபட்ட இந்த வீடுகள் கட்ட போதிய அளவு நிதி இல்லாத காரணமாக சமூக ஆர்வலர் ஜோஸ்வாவின் முயற்சியில் தனியார் பங்களிப்புடன் வீடுகள் கட்டி முடிக்கபட்டு இன்று கிரகபிரவேசம் நடைபெற்று மலைவாழ் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனைக்கட்டியில் 5 பசுமை வீடுகள் ஒப்படைப்பு:  இதையே விரும்பும் 18 கிராம மலைவாழ் மக்கள்!

இந்நிலையில் பசுமை வீடுகள் கட்ட ஒதுக்கபடும் நிதி இரண்டு லட்சத்து பத்தாயிரத்தில் இருந்து மூன்று லட்சமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதன் மூலம் நிதியுதவி பெறாமல் வீடுகள் கட்ட முடியும் என மலைவாழ் மக்கள் தெரிவித்தனர். தற்போது ஐந்து வீடுகள் கட்டி முடுக்கப்பட்ட நிலையில் மீதம் உள்ள வீடுகள் கட்டும் பணி துவங்க உள்ளதாகவும் தெரிவித்தனர். ஐந்து குடும்பங்களுக்கு கூட்டு பட்டா இருப்பதன் காரணமாக அதனை பிரித்து அனைவருக்கும் பசுமை வீடுகள் கட்டி தர முயற்சி மேற்கொள்ளபட்டு வருகிறது.

ஆனைக்கட்டியில் 5 பசுமை வீடுகள் ஒப்படைப்பு:  இதையே விரும்பும் 18 கிராம மலைவாழ் மக்கள்!

கடந்த ஒரு வருடமாக புதிதாக கட்டப்பட்ட வீடுகள் மலைவாழ் மக்கள் முன்னின்று கட்டபட்டது குறிப்பிடத்தக்கது. இதே போல் தங்களுக்கும் பசுமை வீடுகள் கட்டி தர வேண்டும் என 18 கிராம மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

ஆனைக்கட்டியில் 5 பசுமை வீடுகள் ஒப்படைப்பு:  இதையே விரும்பும் 18 கிராம மலைவாழ் மக்கள்!