ஹைட்டி அதிபர் படுகொலையில் திடீர் ட்விஸ்ட்… ‘மாஸ்டர்மைண்ட்’ குற்றவாளி அதிரடி கைது!

 

ஹைட்டி அதிபர் படுகொலையில் திடீர் ட்விஸ்ட்… ‘மாஸ்டர்மைண்ட்’ குற்றவாளி அதிரடி கைது!

கரிபியன் நாடுகளில் ஒன்றான ஹைட்டி நாட்டின் அதிபர் ஜோவெனல் மோஸ் ஆயுதமேந்திய அடையாளம் தெரியாத நபர்களால் அவரது இல்லத்தில் ஜூலை 7ஆம் தேது படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவி மார்ட்டின் மேரி எட்டியென் ஜோசப்பையும் கொலையாளிகள் சுட்டிருக்கின்றனர். படுகாயமடைந்த அவர் உயிருக்குப் போராடி வருகிறார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தகவலை இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் உறுதிப்படுத்தினார். தற்போது அவர் நாட்டின் பாதுக்காப்புக்கு பொறுப்பேற்றிருக்கிறார்.

ஹைட்டி அதிபர் படுகொலையில் திடீர் ட்விஸ்ட்… ‘மாஸ்டர்மைண்ட்’ குற்றவாளி அதிரடி கைது!

இந்தக் கொலை தொடர்பாக 28 பேர் கொண்ட வெளிநாட்டுக் கூலிப்படையை ஹைதி போலீஸார் கைது செய்தனர். இதில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 15 பேர் கொலம்பியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் 2 பேர் ஹைட்டி அமெரிக்கர்கள் எனவும் போலீசார் தெரிவித்திருந்தனர். இந்தக் கொலையில் தற்போது புதிய திருப்பமாக முக்கிய குற்றவாவாளியான கிறிஸ்டியன் இம்மானுவேல் சனோன் என்பவரை ஹைட்டி போலீசார் கைதுசெய்துள்ளனர்.

ஹைட்டி அதிபர் படுகொலையில் திடீர் ட்விஸ்ட்… ‘மாஸ்டர்மைண்ட்’ குற்றவாளி அதிரடி கைது!

இதுகுறித்து போலீஸார் தரப்பில், “இவ்வழக்கின் முக்கிய குற்றவாளி கிறிஸ்டியன் இமானுவேல் சனோன் (60) கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் ஹைதியில் பிறந்து தற்போது அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வாழ்ந்து வருகிறார். இவர் ‘Leadership for Haiti’ என்ற தலைப்பில் 2011ஆம் ஆண்டு யூடியூப்பில் பேசிய வீடியோவில் தன்னை மருத்துவர் என்று அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார். அந்த வீடியோவில அவர் ஹைதி அரசுக்கு எதிரான கருத்துகளை பேசி இருக்கிறார். அவரிடம் இந்தக் கொலை தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது” என்றனர்.