கொரோனா நிதி என்ற பெயரில் வங்கிக் கணக்கு விவரங்களை திருடும் ஹேக்கர்கள்? அதிகம் ஏமாந்தவர்கள் கேரளா என தகவல்?

 

கொரோனா நிதி என்ற பெயரில் வங்கிக் கணக்கு விவரங்களை திருடும் ஹேக்கர்கள்? அதிகம் ஏமாந்தவர்கள் கேரளா என தகவல்?

ஊரடங்கின்போது இந்தியாவுக்குள் நடைபெற்ற சைபர் குற்றச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக கே 7 கம்ப்யூட்டிங் நிறுவனம் பகுப்பாய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் நடிகர்களையும் ஏமாற்றி சைபர் குற்றங்கள் நடைபெற்றுள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

பிப்ரவரி 2020 முதல் 2020 ஏப்ரல் மத்தியம் வரை உலகெங்கிலும் தனிநபர் முதல் கார்ப்பரேட் மட்டத்தில் வேலை செய்பவர்கள் வரை பெரும்பாலானோர் கணக்குகள் திருடப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
பயனர்களின் ரகசிய தரவு, வங்கி விவரங்கள் மற்றும் கிரிப்டோகரன்சி கணக்குகளுக்கான அணுகலைப் பெற கணினிகள் மற்றும் மொபைல் சாதனங்களை வேவு பார்க்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
தலைநகரம் மற்றும் பல்வேறு மாநகரங்களில் இந்த சமயங்களில் இணைதயளம் வழியாக ஹேக்கிங் செய்து அதாவது ஃபிஷிங் தாக்குதல்கள் அதிகம் நடைபெற்றுள்ளது. சிறிய நகரங்களில் 10,000 பயனர்களுக்கு 250 க்கும் மேற்பட்டோரின் கணக்குகள் திருடப்பட்டுள்ளதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

கொரோனா நிதி என்ற பெயரில் வங்கிக் கணக்கு விவரங்களை திருடும் ஹேக்கர்கள்? அதிகம் ஏமாந்தவர்கள் கேரளா என தகவல்?

கேரளாவில், கோட்டயம், கண்ணூர், கொல்லம், மற்றும் கொச்சி போன்ற பிராந்தியங்கள் முறையே 462, 374, 236, மற்றும் 147 தகவல் திருட்டுகள் நடைபெற்றுள்ளது. அதாவது ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 2,000 பேரின் வங்கிக் கணக்கு விவரங்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பஞ்சாப்பில் 207, தமிழகம் 184 பேரின் வங்கி கணக்கு விவரங்கள் திருடப்பட்டுள்ளது.
பெரும்பாலும் இவர்களை அணுகும் சைபர் கிரைம் குற்றவாளிகள் தங்களை அதிநவீன பிரச்சாரவாதிகள் போல் கொரோனோ தொண்டு புரிய நிதி உதவி கேட்டு அழைப்பு விடுப்பதாக தெரிகிறது. மோசடி செய்பவர்கள் அமெரிக்காவின் கருவூலத் துறை, உலக சுகாதார அமைப்பு மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் பிரதிநிதிகள் போல் பேசி ஏமாற்றுகின்றனர்.