‘திமுக மூழ்கும் கப்பல்’ சட்டமன்றத் தேர்தலில் ஜெயிக்காது – ஹெச்.ராஜா

 

‘திமுக மூழ்கும் கப்பல்’ சட்டமன்றத் தேர்தலில் ஜெயிக்காது – ஹெச்.ராஜா

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக நிச்சயம் வெற்றி பெறாது என என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேர்தல் கூட்டணி, தேர்தல் களப்பணி என அரசியல் களம் பரபரப்பாக இருந்து வருகிறது. பிரதான கட்சிகளான திமுகவுடன் காங்கிரஸும், அதிமுகவுடன் பாஜகவும் கூட்டணி அமைக்கும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், பாஜக திமுகவுடன் கூட கூட்டணி அமைக்கலாம் என பாஜக மூத்த தலைவர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று தெரிவித்தார்.

‘திமுக மூழ்கும் கப்பல்’ சட்டமன்றத் தேர்தலில் ஜெயிக்காது – ஹெச்.ராஜா

அதிமுக மீதான நம்பகத்தன்மை குறைந்ததாலும் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் பிரச்னை நிலவுவதாலும் அவர் இவ்வாறு கூறியிருக்கலாம் என திமுக பிரமுகர்கள் விமர்சித்து வருகின்றனர். ஆனால் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்த பிரச்னையும் இல்லை, இவை அனைத்துமே திமுகவின் பரப்பும் வதந்தி என அதிமுக பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு ஒருவரை ஒருவர் சாடிக் கொண்டிருக்க மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, திமுக ஒரு மூழ்கும் கப்பல் என்றும் திமுக கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறாது என்றும் தெரிவித்தார். மேலும் திமுக கூட்டணியில் பாஜக இடம்பெறலாம் என்ற பொன்னார் கூறியது பற்றி பதில் அளிக்க மறுப்பு தெரிவித்து விட்டார்.