கிருஷ்ணகிரி வழியாக கடத்திய ரூ.4 லட்சம் குட்கா பறிமுதல் – இருவர் கைது

 

கிருஷ்ணகிரி வழியாக கடத்திய ரூ.4 லட்சம் குட்கா பறிமுதல் – இருவர் கைது

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே லாரியில் கடத்திவரப்பட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி காவல் ஆய்வாளர் ரஜினி தலைமையில் போலீசார், ஓசூர் – கிருஷ்ணகிரி சாலையில் மேலுமலை அடிவாரத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

கிருஷ்ணகிரி வழியாக கடத்திய ரூ.4 லட்சம் குட்கா பறிமுதல் – இருவர் கைது

அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த சரக்கு லாரியை பிடித்து சோதனை மேற்கொண்டனர். அதில் லாரியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை மறைத்து கடத்தி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து, சுமார் 4 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், குட்காவை கடத்தியது தொடர்பாக சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த ஓட்டுநர் கண்ணன்(25) மற்றும் உதவியாளர் வெங்கடேஷ்(26) ஆகியோரை கைதுசெய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக லாரியின் உரிமையாளர் கணேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.