திமுகவை எதிர்க்க வேண்டுமெனில் சசிகலா போன்றவர்களையும் சேர்த்து கொள்ள வேண்டும் – குருமூர்த்தி

 

திமுகவை எதிர்க்க வேண்டுமெனில் சசிகலா போன்றவர்களையும் சேர்த்து கொள்ள வேண்டும் – குருமூர்த்தி

சென்னை கலைவாணர் அரங்கில் துக்ளக் வார இதழின் 51 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, “அதிமுக இல்லை என்றால் தமிழகத்தில் ஆன்மீகம், தேசியம் இருந்திருக்காது. யார் தேசியத்தை விரும்பிகிறார்களோ அவர்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க விரும்பும் சூழல் உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுமை உள்ளது. அதனால் தான் தேசிய கட்சிகள் தமிழகத்தில் வளர முடியவில்லை

திமுகவை எதிர்க்க வேண்டுமெனில் சசிகலா போன்றவர்களையும் சேர்த்து கொள்ள வேண்டும் – குருமூர்த்தி

பாஜக தமிழகத்திற்கு தேவை. பாஜகவிற்கு அடுத்த 5 ஆண்டுகளில் வளர்ச்சி அடையும். தமிழகத்தில் ஜாதி கட்சிகள் உருவாக திராவிடமே காரணம். பிராமண எதிர்ப்பு தான் ஜாதி கட்சி உருவாக காரணம். திமுகவை எதிர்க்க வேண்டுமெனில் சசிகலா போன்றவர்களையும் சேர்த்து கொள்ள வேண்டும். வீடு பற்றி எரியும் போது, கங்கை ஜலத்திற்கு காத்திருக்க முடியாது. சாக்கடை நீரை வைத்தாவது அதனை அணைக்க வேண்டும்.

இந்துகளின் வாக்கு வங்கி உருவாகி கொண்டிருக்கிறது. நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் குறைவாக இருக்கும். அடுத்தடுத்த தேர்தலில் மாற்றம் இருக்கும். ஊழலில் ஈடுபடுபவர்கள் மீது உச்சநீதிமன்றம் கருணை காட்டினால் நாட்டில் எப்படி லஞ்சம் ஊழல் ஒழியும். அரசியல்வாதிகள் உட்பட பலரின் காலை பிடித்து நீதிபதிகளாகிவிடுகின்றனர் ராமர் கோவில் பிரச்சனையை உருவாக்கியதே இடதுசாரிகள் தான். தமிழக அரசியல் காமெடி அரசியலாக மாறிவிட்டது” எனக் கூறினார்.