நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை எதிரொலி… முழு கொள்ளளவை எட்டிய குண்டேரிப்பள்ளம் அணை…

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை எதிரொலி… முழு கொள்ளளவை எட்டிய குண்டேரிப்பள்ளம் அணை…

ஈரோடு

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, கோபிசெட்டிப்பாளையம் அருகேயுள்ள குண்டேரிப்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவை எட்டியது.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகேயுள்ள கொங்கர்பாளையம் வனப்பகுதியை ஒட்டி குண்டேரிப்பள்ளம் அணை உள்ளது. 42 அடி மொத்தம் உயரமுடைய இந்த அணையின் மூலம், சுற்றுவட்டாரத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சுமார் 2 ஆயிரத்து 498 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை எதிரொலி… முழு கொள்ளளவை எட்டிய குண்டேரிப்பள்ளம் அணை…

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான குன்றி, விளாங்கோம்பை, கம்பனூர், கடம்பூர் வனப் பகுதிகளில், தொடர் மழை பெய்து வந்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து சீராக அதிகரித்தால், அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு விடாது பெய்த மழையினால், குண்டேரிப்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 42 அடியை எட்டியது. இதனையடுத்து, சுற்றுவட்டார கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.