‘இந்தியாவிலேயே முதன்முறையாக’ வழக்கு விசாரணையை நேரலை செய்த குஜராத் நீதிமன்றம்!

 

‘இந்தியாவிலேயே முதன்முறையாக’ வழக்கு விசாரணையை நேரலை செய்த குஜராத் நீதிமன்றம்!

குஜராத் நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை நேரலை செய்யப்பட்டது, மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து நாடு முழுவதும் மால்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டது. அந்த வகையில், நீதிமன்றங்களும் மூடப்பட்டதால் காணொளி வாயிலாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து இருந்தாலும் கூட, பல மாநிலங்களில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காணொளி விசாரணையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

‘இந்தியாவிலேயே முதன்முறையாக’ வழக்கு விசாரணையை நேரலை செய்த குஜராத் நீதிமன்றம்!

இந்த நிலையில், இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக குஜராத் நீதிமன்றம் வழக்கு விசாரணையை யூ டியூபில் நேரலை செய்திருக்கிறது. இன்று குஜராத் தலைமை நீதிபதிகள் அமர்வில் நடந்த வழக்கு விசாரணைகள் அனைத்தையும் ஜூம் ஆப் மூலமாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை எப்படி நடைபெறுகிறது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக வழக்கு விசாரணை நேரலை செய்யப்பட்டது, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.