2 வயது குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய கடலை அகற்றம்… அரசு மருத்துவர்களுக்கு குவியும் பாராட்டு….

 

2 வயது குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய கடலை அகற்றம்… அரசு மருத்துவர்களுக்கு குவியும் பாராட்டு….

தர்மபுரி

தர்மபுரியில் 2 வயது ஆண் குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய நிலக்கடலையை வெற்றிகரமாக அகற்றி, அரசு மருத்துவர்கள் மறுவாழ்வு வழங்கியுள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் சோம்பட்டி கிராமத்தில் 2 வயது ஆண் குழந்தை ஒன்று, வீட்டில் விளையாடியபோது எதிர்பாராத விதமாக நிலக்கடலை ஒன்று அதன் முச்சுக்குழாயில் சிக்கிக்கொண்டது. இதனால் அந்த குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சுவாசிக்க சிரமப்பட்டுள்ளார். இதனை கண்ட பெற்றோர் உடனாடியாக குழந்தையை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் ரமேஷ்பாபு தலைமையிலான மருத்துவ குழுவினர், குழந்தைக்கு உடனடியாக சிகிச்சையை தொடங்கினர். சில மணிநேர போராட்டத்திற்கு பின்னர் எண்டாஸ்கோபி கருவி மூலம் சிறுவனது மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த நிலக்கடலை வெளியே எடுக்கப்பட்டது.

2 வயது குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய கடலை அகற்றம்… அரசு மருத்துவர்களுக்கு குவியும் பாராட்டு….

இதனால், குழந்தை மூச்சுத்திணறலில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பியது. தங்களின் குழந்தையை காப்பாற்றிய அரசு மருத்துவர்களுக்கு, குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக்கொண்டனர். இதுகுறித்து பேசிய தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் இளங்கோவன், குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோரும், குடும்பத்தாரும் மிக அதிக அக்கறை காட்ட வேண்டும் என்றும், இதுபோன்ற பிரச்சினை ஏற்படும்போது தாமதம் செய்யாமல் விரைவாக குழந்தைகளை மருத்துவர்களிடம் அழைத்து செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.