கருத்துரிமை ஜனநாயகத்தின் அடிப்படை அலகு – திஷா ரவிக்கு கிரேட்டா தன்பெர்க் ஆதரவு!

 

கருத்துரிமை ஜனநாயகத்தின் அடிப்படை அலகு – திஷா ரவிக்கு கிரேட்டா தன்பெர்க் ஆதரவு!

டெல்லியில் குடியரசு தினத்தன்று நடைபெற்ற விவசாயிகளின் பேரணி வன்முறையாகத் திசைமாற்றப்பட்டது. இதனால் அப்பாவி விவசாயிகளும் பாதிக்கப்பட்டனர். காவல் துறையினர் அனைவரையும் கடுமையாகத் தாக்கினர். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் டெல்லி போலீஸ் களமிறங்கியுள்ளது. டெல்லி வன்முறைக்கு முழுக்க முழுக்க வெளிநாடுகளிலிருக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தான் காரணம் என்று நம்புகிறது. அதற்கு ஆதாரச் சுருதியாக இருப்பது போராட்டம் எப்படி நடத்த வேண்டும் என்பதை விளக்கும் டூல்கிட்டை குற்றஞ்சாட்டுகிறது.

கருத்துரிமை ஜனநாயகத்தின் அடிப்படை அலகு – திஷா ரவிக்கு கிரேட்டா தன்பெர்க் ஆதரவு!

சர்ச்சைக்குரிய அந்த டூல்கிட்டை ட்விட்டரில் பகிர்ந்ததற்காக சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் மீது எப்ஐஆர் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவரின் ஆதரவாளரான திஷா ரவி தான் இந்த டூல்கிட்டை உருவாக்கி பரப்பினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் டெல்லி போலீஸின் சைபர் பிரிவு கைதுசெய்துள்ளது. அவருக்கு நேற்றோடு ஐந்து நாள் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில், மூன்று நாட்களுக்கு நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இச்சூழலில் திஷா ரவியின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிரேட்டா தன்பெர்க் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில், ஒரு ஜனநாயக நாட்டில் கருத்துரிமை, அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிப்பது, போராடுவது ஆகிய அனைத்தும் அடிப்படை மனித உரிமை என்று குறிப்பிட்டுள்ளார். கிரேட்டாவின் பி’ஃப்ரைடே’ஸ் ஃபார் ஃபியூச்சர்’ (Fridays For Future) என்ற சூழலியல் அமைப்பின் இந்தியக் கிளையை நிறுவியவர் திஷா ரவி என்பது கவனித்தக்கது.