“விளையாட போன பேரனால் வெறிகொண்ட பாட்டி” -இரும்பு சங்கிலியால் பேரனை கட்டி வைத்து,முட்டியை உடைத்த பாட்டி கைது..

பொதுவாக பாட்டிகளுக்கு பேரனைத்தான் எப்போதும் பிடிக்கும் .ஆனால் இங்கு ஒரு பாட்டி வித்தியாசமாக தன்னுடைய பேரனை கட்டிவைத்து தினமும் அடித்து கொடுமை செய்துள்ள காட்சியை கண்டு பலரின் மனம் பதறியது .
Eight-year-old child thrashed by grandmother [Representative image]
பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் நீச்சி மங்லி வட்டாரத்தில் ஒரு மூதாட்டி தன்னுடைய மகள் மற்றும் பேரன் பேத்திகளோடு வசித்து வந்தார் .கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவரின் மகள் அவரின் கணவனிடமிருந்து விவகாரத்து பெற்று பாட்டியோடு வந்து விட்டார் .மேலும் அந்த கவலையில் அவர் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் தன்னுடைய அம்மாவிடம் விட்டு விட்டு இறந்து விட்டார் .
அவரின் மகள் இறந்தது முதல் அந்த பாட்டி தன்னுடைய எட்டு வயது பேரனை இரும்பு சங்கிலியால் கட்டி வைத்து, தினமும் முட்டியில் ரத்தம் வரும்வரை அடித்து கொடுமைப்படுத்துவார் .இதற்கு என்ன காரணமென்றால் பேரன் விளையாட போகிறானாம் .
இந்த காட்சியை பார்த்து பொறுக்க முடியாத பக்கத்து வீட்டுக்காரர் பால்விந்தர் கவுர் ஜூலை 28ம் தேதியன்று போலீசில் பாட்டி பேரனை கொடுமைப்படுத்துவதாக புகார் கூறினார் .அவரின் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் நேரில் விசாரணை நடத்த பாட்டியின் வீட்டிற்கு சென்ற போது ,ஒரு அதிர்ச்சியான காட்சியை கண்டு பொங்கி எழுந்தனர் .ஆம் ,அங்கு போலீசார் கண்ட காட்சி நெஞ்சை பதறவைக்கும் .அங்கு அவரின் எட்டு வயது பேரன் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டு, உடல் முழுவதும் ரத்தம் வழிய துடித்து கொண்டிருந்தான் .இதனால் போலீசார் அந்த சிறுவனை பேரனிடமிருந்து விடுவித்து ,கொடுமை செய்த பாட்டி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .

Most Popular

ரூ.15 லட்சத்துடன் கொள்ளையர்கள் ஓட்டம்… மடக்கி பிடித்த பொதுமக்கள்!- சென்னையில் சினிமாவை விஞ்சிய சம்பவம்

சென்னையில் பட்டப்பகலில் 15 லட்சம் ரூபாயை கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையனை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். சினிமா விஞ்சம் அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சென்னை ராயபுரம் ஆதம் தெருவைச் சேர்ந்த சாகுல் அமீது (29)...

தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்க : எம்பி திருமாவளவன் வலியுறுத்தல்!

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்த தொழிலாளர்கள் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கரமான நிலச்சரிவில் இருபது வீடுகள்...

திருப்பதி கோயில் திறக்கப்பட்டதிலிருந்து சுமார் 743 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று!

திருப்பதியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றானது அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் பொது முடக்க தளர்வுகளின் போது, திருப்பதி ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அங்கு கோவில் ஊழியர்கள் முதல்...

தமிழகம் முழுவதும் உடற்பயிற்சிக் கூடங்கள் இன்று காலை முதல் செயல்படத் தொடங்கியது!

கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டு கிடந்த உடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் இயங்கலாம் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 50 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் ஜிம்கள் இயங்கலாம் என்றும்...