தஞ்சையில் மூதாட்டியை கொன்று நகை, செல்போன் கொள்ளை… வேலைக்கார பெண் கைது!

 

தஞ்சையில் மூதாட்டியை கொன்று நகை, செல்போன் கொள்ளை… வேலைக்கார பெண் கைது!

தஞ்சை

தஞ்சையில் நகைக்காக மூதாட்டியை கழுத்தை நெரித்துக்கொன்ற வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை மருத்துவக் கல்லூரி சேக்சிலார் தெருவை சேர்ந்தவர் ஆண்டனி ஜோர்டன் மனைவி ஜாக்குலின்(65). இவரது மகன் பிராங்கிளின். இவர் மதுரையில் ரயில்வே டி.டி.ஆர். ஆக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 15ஆம் தேதி இரவு பிராங்கிளின், தாயார் ஜாக்குலினுக்கு போன் செய்துள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் போனை எடுக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த பிராங்கிளின் உடனடியாக தஞ்சையில் உள்ள தனது வந்து பார்த்தபோது, நாற்காலியில் அமர்ந்த நிலையில் ஜாக்குலின் கழுத்தில் காயத்துடன் இறந்து கிடந்தார். மேலும், அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 சரவன் தங்க செயின், செல்போன், ஏ.டி.எம் கார்டு ஆகியவையும் திருடுபோனது தெரிய வந்தது.

தஞ்சையில் மூதாட்டியை கொன்று நகை, செல்போன் கொள்ளை… வேலைக்கார பெண் கைது!

இதனால் அதிர்ச்சியடைந்த பிராங்கிளின், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் தகவல் அளித்தார். அதன் பேரில், போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஜாக்குலின் வீட்டில் பணிபுரியும் மானேஜிப்பட்டியை சேர்ந்த டெய்சி (35) மீது சந்தேகம் ஏற்படவே, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில், நகைக்கு ஆசைப்பட்டு ஜாக்குலினை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து, டெய்சியை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்த தங்க செயின், செல்போனை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.