‘நாளை பிரம்மாண்ட டிராக்டர் பேரணி’ : டெல்லிக்கு படையெடுக்கும் விவசாயிகள்!

 

‘நாளை பிரம்மாண்ட டிராக்டர் பேரணி’ : டெல்லிக்கு படையெடுக்கும் விவசாயிகள்!

டெல்லியில் போராடி வரும் விவசாயிகள், நாளை குடியரசு தினத்தையொட்டி மத்திய அரசுக்கு எதிராக டிராக்டர் பேரணி நடத்தவிருக்கின்றனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து விவசாயிகள் போராடி வருகின்றனர். டெல்லியின் புராரி மைதானத்தில் மையம் கொண்ட விவசாயிகள், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து கடுமையான போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். போராட்டத்தை தடுக்க மத்திய அரசு கையில் எடுத்த எந்த நடவடிக்கையும் விவசாயிகள் மத்தியில் எடுபடவில்லை. 11 முறை விவசாய அமைப்புகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையும் தோல்விலேயே முடிந்ததால், போராட்டம் இன்று வரை தொடருகிறது.

‘நாளை பிரம்மாண்ட டிராக்டர் பேரணி’ : டெல்லிக்கு படையெடுக்கும் விவசாயிகள்!

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். இருப்பினும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு ஒப்புக் கொள்ளவில்லை. மாறாக, ஒன்றரை வருடங்களுக்கு சட்டத்தை நிறுத்தி வைப்பதாக தெரிவித்தது. அதை விவசாயிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.

‘நாளை பிரம்மாண்ட டிராக்டர் பேரணி’ : டெல்லிக்கு படையெடுக்கும் விவசாயிகள்!

இந்த சூழலில் தான், மத்திய அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து டெல்லியில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்தனர். குடியரசு தின நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் பேரணியை நடத்த விவசாயிகள் ஒப்புக் கொண்டதை அடுத்து கட்டுப்பாடுகளுடன், பேரணி நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளனர். அதன்படி நாளை டெல்லியில் பிரம்மாண்ட பேரணி நடைபெற உள்ளது.

காசிப்பூர், சிங்கு, திக்ரி 3 எல்லைகள் வழியாக சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெறவுள்ள இந்த பேரணியில் 3 லட்சம் டாக்டர்கள் விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். இதில் கலந்து கொள்ள உத்திரப் பிரதேசம் – டெல்லி எல்லையில் உள்ள காசிப்பூருக்கு விவசாயிகள் படையெடுத்து வருகின்றனர். இந்த பேரணி, விவசாயிகள் போராட்டத்திற்கு ஒரு திருப்பு முனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.