அரசுப் பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து – 10 பயணிகள் படுகாயம்!

 

அரசுப் பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து – 10 பயணிகள் படுகாயம்!

தூத்துக்குடி

ஶ்ரீவைகுண்டம் அருகே அரசுப் பேருந்து வயல்வெளியில் கவிழ்து விபத்திற்கு உள்ளானதில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து இன்று காலை 20-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு, அரசுப்பேருந்து ஒன்று நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஶ்ரீவைகுண்டம் அடுத்த கருங்குளம் பகுதியில் சென்றபோது, அங்கு பெட்ரோல் பங்க் அமைப்பதற்காக மணல் கொட்டும் பணியில் ஈடுபட்டிருந்த லாரி ஒன்று, திடீரென சாலையின் குறுக்கே வந்தது.

அரசுப் பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து – 10 பயணிகள் படுகாயம்!

அப்போது, லாரியின் மீது மோதாமல் இருக்க ஓட்டுநனர், பேருந்தை திருப்ப முயன்றார். இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, திடீரென வயல் வெளியில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில் பேருந்தில் இருந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த செய்துங்கநல்லூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்து காரணமாக நெல்லை – தூத்துக்குடி சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.