திருப்பதி: கோவிந்தராஜ சுவாமி கோவில் 48 மணி நேரத்திற்கு மூடல் – தேவஸ்தான ஊழியருக்கு கொரோனா!

தேவஸ்தான ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கோவிந்தராஜ சுவாமி கோவில் 48 மணி நேரத்திற்கு மூடப்பட்டது.

திருப்பதி: தேவஸ்தான ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கோவிந்தராஜ சுவாமி கோவில் 48 மணி நேரத்திற்கு மூடப்பட்டது.

திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கோவிந்தராஜ சுவாமி கோவிலின் நடை பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாதவாறு 48 மணி நேரம் மூடப்பட்டுள்ளது. கோவிலில் பணிபுரியும் சுகாதார பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் திருப்பதி தேவஸ்தான ஊழியர் ஆவார்.

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த சுகாதார பணியாளர் மதுரா நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்காகவும், தனிமைப்படுத்தப்படுவதற்காகவும் அனுமதிக்கப்பட்டுள்ளார். 48 மணி நேரத்திற்கு பின்பு மீண்டும் பக்தர்கள் தரிசனத்திற்காக இந்தக் கோவில் நடை திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Most Popular

அடுத்தடுத்து திருப்பங்கள். பா.ஜ.க. தலைவர் நட்டாவை சந்திக்கும் சச்சின் பைலட்…பெரும்பான்மையை இழக்கும் காங்கிரஸ்

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே நீண்ட நாட்களாக மன கசப்பு இருந்து வந்தது. தற்போது...

மத்திய பிரதேசத்தில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்… காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரதியுமான் லோதி பா.ஜ.க.வில் ஐக்கியம்..

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நேரம் சரியில்லை என்றே தெரிகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் நடந்த உட்கட்சி சண்டையால், 18 ஆண்டுகளாக அந்த கட்சியின் தீவிர விசுவாசியாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா அந்த கட்சியிலிருந்து...

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. எம்.பி., எம்.எல்.ஏ. மீது டி.எம்.சி. குண்டர்கள் தாக்குதல்… பா.ஜ.க. எம்.பி. சவுமித்ரா குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். தொடர்ந்து...

ஆகஸ்டில் தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்… கேள்விகளோடு காத்திருக்கும் எதிர்க்கட்சிகள்…

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உறுதி செய்துள்ளார். மேலும் சபை நடவடிக்கைகளை நடத்துவது தொடர்பாக பல்வேறு வாய்ப்புகள் குறித்து ஆலோசனை...
Open

ttn

Close