தனது மகளாக நினைத்து என் பேச்சை ஆளுநர் கேட்டது எனக்கு மகிழ்ச்சி: கங்கனா ரனாவத்

 

தனது மகளாக நினைத்து என் பேச்சை ஆளுநர் கேட்டது எனக்கு மகிழ்ச்சி: கங்கனா ரனாவத்

பாலிவுட் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது குறித்து பேசிய நடிகை கங்கனா ரனாவத் மும்பை நகரம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல இருக்கிறது என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதற்கு சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து கங்கனாவுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். அவர் மும்பைக்குள் வர கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் கங்கனா ரனாவத்துக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளது. இதனால் கங்கனாவுக்கு பாஜக ஆதரவு தெரிவிப்பதாக சிவசேனா தெரிவித்தது. மேலும் மும்பையில் கங்கனாவின் மணிகர்ணிகை அலுவலகம், வீடு ஆகியவை சட்ட விரோதமாக கட்டப்பட்டதாக கூறி மும்பை மாநகராட்சி இடித்தது.

தனது மகளாக நினைத்து என் பேச்சை ஆளுநர் கேட்டது எனக்கு மகிழ்ச்சி: கங்கனா ரனாவத்

இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத் மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை இன்று சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா ரனாவத், “எனக்கு இழைக்கபப்ட்ட அநீதி குறித்து ஆளுநரை சந்தித்து விவரித்தேன். இளம்பெண்கள் உட்பட அனைத்து குடிமக்களின் நம்பிக்கையையும் மீட்டெடுக்க எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தனது மகளாக நினைத்து என் பேச்சை ஆளுநர் கேட்டது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்தார்.