போஸ்ட் ஆபிஸ், ரப்பர் ஸ்டாம்ப் போல் கவர்னர் இருக்க வேண்டும் என மம்தா விரும்புகிறார்… ஜகதீப் தங்கர் ஆவேசம்

போஸ்ட் ஆபிஸ், ரப்பர் ஸ்டாம்ப் போல் கவர்னர் இருக்க வேண்டும் என மம்தா விரும்புகிறார்… ஜகதீப் தங்கர் ஆவேசம்

மேற்கு வங்கத்தில் கவர்னர், போஸ்ட் ஆபிஸ், ரப்பர் ஸ்டாம்ப் போல் இருக்கு வேண்டும் என முதல்வர் மம்தா பானர்ஜி விரும்புகிறார் என அம்மாநில கவர்னர் ஜகதீப் தங்கர் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், கவர்னர் ஜகதீப் தங்கருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. தற்போது அந்த மோதல் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. மேற்கு வங்க கவர்னர் ஜகதீப் தங்கர் நேற்று முதல்வர் மம்தா பானர்ஜியை கடுமையாக தாக்கினார். கவர்னர் ஜகதீப் தங்கர் கூறியதாவது: கவர்னர் மாளிகையில் (ராஜ் பவனில்) கவர்னர் ஒரு தபால் அலுவலகம், ரப்பர் ஸ்டாம்பாக இருக்க வேண்டும் என முதல்வர் விரும்புகிறார்.

போஸ்ட் ஆபிஸ், ரப்பர் ஸ்டாம்ப் போல் கவர்னர் இருக்க வேண்டும் என மம்தா விரும்புகிறார்… ஜகதீப் தங்கர் ஆவேசம்
மேற்கு வங்க கவர்னர் ஜகதீப் தங்கர்

எனவே அரசியலமைப்பு சட்டம் என்ன கூறுகிறது என்பதை முதல்வருக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். அரசியலமைப்பில் 167வது பிரிவு, கவர்னருக்கு தகவல்களை வழங்குவது முதல்வரின் கடமைகள் என்பதை வலியுறுத்துகிறது. பல்வேறு துறைகள் உள்பட பல தகவல்களை எழுத்துப்பூர்வமாக கேட்டுள்ளேன். ஆனால் இதுவரை எந்தவித பதிலும் இல்லை. எனது பல கோரிக்கைள் பொது நலனுக்கு எதிராக புறக்கணிக்கப்பட்டன. புறக்கணிக்கப்படுவதால் மக்களுக்கு உண்மையான நிலவரம் தெரியாது.

போஸ்ட் ஆபிஸ், ரப்பர் ஸ்டாம்ப் போல் கவர்னர் இருக்க வேண்டும் என மம்தா விரும்புகிறார்… ஜகதீப் தங்கர் ஆவேசம்
அப்துல் மன்னன்

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை பற்றிய தகவல்களை நான் கோரியபோதிலும் முதல்வர் தரப்பிலிருந்து பதில் கிடைக்கவில்லை. ஜூனியர் போலீஸ் அதிகாரி ஒருவரால் தான் மிரட்டப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் அப்துல் மன்னன் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதினார். ஆனால் மம்தா பதில் அளிக்கவில்லை. அதனையடுத்து அப்துல் மன்னன் எனக்கு கடிதம் எழுதினார். உடனே நான் அவரை அழைத்து பேசினேன். மேலும் இது தொடர்பாக நான் முதல்வருக்கு கடிதம் எழுதினேன். ஆனால் எங்களுக்கு எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.