ஊரடங்கு விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்!

 

ஊரடங்கு விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அரசின் பொது சுகாதார சட்டத் திருத்தத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக பொது முடக்கம் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதனால் பொது போக்குவரத்து, நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் மூடப்பட்டன. தொடக்கத்தில் உழைப்புக்கு விடுமுறை கிடைத்ததாக மக்கள் நினைத்தாலும் காலப்போக்கில் இந்த ஊரடங்கு கழுத்தை நெரிக்கும் கயிறு என மக்கள் உணர தொடங்கினர். இந்த ஊரடங்கால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து கஷ்டப்பட்டனர். ஆனாலும் ஊரடங்கை தவிர கொரோனாவை விரட்ட பெரிய ஆயுதம் வேறு இல்லை என அரசு பலமாக நம்பியது. இதனால் படிப்படியாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டே வந்தது. 5 மாதமாக முடங்கி கிடந்த மக்களை கட்டவிழுத்து விடும் வகையில் செப்.1 ஆம் தேதி முதல் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்புகள் குறையாத சூழலில் அரசின் வழிமுறைகளை மக்கள் கடைபிடிப்பார்களா? கொரோனா கட்டுக்குள் வருமா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

ஊரடங்கு விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்!

இந்நிலையில் கொரோனா விதிமுறைகளான பொது இடங்களில் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் பொது சுகாதார சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் கொண்டுவந்துள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.