மக்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றும் அரசு – அமைச்சர் கே.பி.அன்பழகன்

மக்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றும் அரசு – அமைச்சர் கே.பி.அன்பழகன்

மக்களின் தேவை மற்றும் எதிர்பார்ப்புகளை அவ்வப்போது அறிந்து, அவற்றை நிறைவேற்றும் விதமாக திட்டங்களை செயல்படுத்தும் அரசாக இன்றைய தமிழக அரசு உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார். தர்மபுரி மாவட்டம் பைசுஅள்ளி அடுத்த பள்ளத்துக்கொட்டாய்

மக்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றும் அரசு – அமைச்சர் கே.பி.அன்பழகன்

கிராமத்தில் புதிய பகுதிநேர ரேஷன் கடையை திறந்து வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும், தர்மபுரி மலைப்பாங்கான மாவட்டமாக இருந்ததால், அதற்கு ஏற்ப ரேஷன் கடைகளை அமைத்துக் கொள்ள வசதியாக, விதிகளில் முன்னாள் முதலமைச்சர்

மக்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றும் அரசு – அமைச்சர் கே.பி.அன்பழகன்

ஜெயலலிதா தளர்வுகளை அறிவித்ததாகவும், அதனால் தர்மபுரி மாவட்டத்தில் தற்போது ஆயிரத்து 65 ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், ஒரே ஆண்டில் பைசுஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 4 பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு காரணமாக அமைந்தவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இந்த அரசுக்கு தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் ஆதரவை அளித்திட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.