கர்நாடகாவில் கொரோனா நோயாளிகள் வீடுகளின் முன்பு நோட்டீஸ் ஒட்டும் அரசு! – குமாரசாமி கண்டனம்

 

கர்நாடகாவில் கொரோனா நோயாளிகள் வீடுகளின் முன்பு நோட்டீஸ் ஒட்டும் அரசு! – குமாரசாமி கண்டனம்

கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளின் முன்பு மாநில அரசு நோட்டீஸ் ஒட்டி வருவது நவீன தீண்டாமைக்கு வழிவகுக்கும் என்று முன்னாள் முதல்வர் குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. அம்மாநிலத்தில் 63,772 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. ஊரடங்கு உள்ளிட்டவற்றை தளர்த்தியதால் கொரோனாத் தொற்று அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

கர்நாடகாவில் கொரோனா நோயாளிகள் வீடுகளின் முன்பு நோட்டீஸ் ஒட்டும் அரசு! – குமாரசாமி கண்டனம்பெங்களூரூ நகரம் மிக மோசமான அளவில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா நோயாளிகள் வீடுகளின் முன்பு அரசு சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

கர்நாடகாவில் கொரோனா நோயாளிகள் வீடுகளின் முன்பு நோட்டீஸ் ஒட்டும் அரசு! – குமாரசாமி கண்டனம்மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி இது குறித்து கூறுகையில், “கொரோனா தொடர்பாக எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டுவது, மக்கள் மத்தியில் சமூக பாகுபாட்டையும், நவீன தீண்டாமையையும் ஏற்படுத்தும். தொற்றால் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினர் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். எனவே, இந்த நடவடிக்கையை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
நோட்டீஸ் ஒட்டுவதற்கு பதில், சுகாதாரப் பணியாளர்களை அனுப்பி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்றவற்றை செய்ய வேண்டும். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்” என்றார்.