இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1,168 கோடிக்கு விற்பனையான தங்க பத்திரம்…

 

இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1,168 கோடிக்கு விற்பனையான தங்க பத்திரம்…

இந்தியாவில் தங்க ஆபரண பயன்பாடு அதிகம். அதேசமயம் உள்நாட்டில் உற்பத்தி பெயரளவுக்கு உள்ளதால் தேவையை பூர்த்தி செய்வதற்காக தங்கம் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கிறது. இதனை தவிர்க்கவும், தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்கும் நோக்கில், 2015 நவம்பரில் பிரதமர் நரேந்திர மோடி தங்க பத்திர திட்டத்தை தொடங்கி வைத்தார். தங்கத்தை உலோகமாக வாங்குவதற்கு பதில் காகித வடிவில் (பத்திரமாக) வாங்குவதை தங்க பத்திர திட்டம். அந்த மாதத்தில் முதல் தங்க பத்திரம் வெளியீடு நடைபெற்றது.

இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1,168 கோடிக்கு விற்பனையான தங்க பத்திரம்…

இந்த நிதியாண்டில் இரண்டாவது கட்ட தங்க பத்திர வெளியீடு இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் நடைபெற்றது. இந்த வெளியீடு ஒரு வார காலம் மட்டுமே நடைபெற்றது. ஒரு கிராம் விலை ரூ.4,590 என்ற மதிப்பில் தங்க பத்திரம் விலை நிர்ணயிக்கப்பட்டது. இந்த வெளியீட்டில் 2,544.3 கிலோ அளவுக்கு தங்கத்துக்கு பத்திரங்கள் விற்பனையானது. அதாவது ரூ.1,168 கோடிக்கு தங்க பத்திரங்கள் விற்பனையாகியுள்ளது. தங்க பத்திரம் அறிமுகம் செய்யப்பட்ட 2015 நவம்பர் முதல் இதுவரையிலான காலத்தில் தங்க பத்திரங்கள் விற்பனை வாயிலாக திரட்டப்பட்ட மிகப்பெரிய தொகை இதுதான். இதற்கு முன் அதிகபட்சமாக 2016 நவம்பர் மாதத்தில் ரூ.1,082 கோடிக்கு தங்க பத்திரங்களை மத்திய அரசு விற்பனை செய்து இருந்தது.

இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1,168 கோடிக்கு விற்பனையான தங்க பத்திரம்…

கடந்த 2019-20ம் நிதியாண்டில் மத்திய அரசு தங்க பத்திரங்கள் விற்பனை வாயிலாக மொத்தம் ரூ.2,316 கோடி திரட்டியது. கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற தங்க பத்திர வெளியீட்டின்போது, ரூ.822 கோடிக்கு தங்க பத்திரங்கள் விற்பனையானது. இதனையடுத்து இந்த நிதியாண்டில் இதுவரை (ஏப்ரல் மற்றும் மே) தங்க பத்திர வெளியீடு வாயிலாக ரூ.1,990 கோடிக்கு தங்க பத்திரங்கள் விற்பனை செய்துள்ளது.