நாளை முதல் எங்க வேணாலும் போங்க…. வாங்க…

 

நாளை முதல் எங்க வேணாலும் போங்க…. வாங்க…

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த 68 நாட்களாக அமலில் இருந்த நாடு தழுவிய லாக்டவுனால் மக்கள் மிகுந்த சிரமப்பட்டனர். இம்மாதம் தொடக்கத்தில் லாக்டவுனில் சில தளர்வு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. இதனால் இன்றோடு முடிவடையும் லாக்டவுன் 4.0க்கு பிறகு லாக்டவுன் நீட்டிக்கப்படாது என எதிர்பார்க்கப்பட்டது. அதேசமயம் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்து வருவதால் லாக்டவுனை மத்திய அரசு நீட்டிக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.

நாளை முதல் எங்க வேணாலும் போங்க…. வாங்க…

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சம் நேற்று UNLOCK 1.0 என்ற பெயரில் கட்டுபட்டுத்துதல் மண்டலங்களை தவிர ஏனைய பகுதிகளுக்கு ஒரு மாத காலத்துக்கு ஊரடங்கு தளர்வுகள் தொடர்பான புதிய புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதன்படி 3 கட்டமாக தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி ஜூன் 8ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் பொது மக்களுக்காக திறப்பு மற்றும் ஷாப்பிங் மால்கள் திறப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

நாளை முதல் எங்க வேணாலும் போங்க…. வாங்க…

இருப்பினும் நாளை முதல் சில தளர்வுகள் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. அருகிலுள்ள கடைகள் திறந்து கொள்ளலாம். மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு இடையேயும் மக்கள் மற்றும் சரக்குகள் செல்ல எந்த தடையும் இருக்காது. இதற்காக தனியாக அனுமதி, ஒப்புதல் அல்லது இ அனுமதி தேவையில்லை.