“கொரோனா நோயாளிகளை 3 வகைகளாக பிரித்து சிகிச்சை” புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

“கொரோனா நோயாளிகளை 3 வகைகளாக பிரித்து சிகிச்சை”  புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் கொரோனா பாதித்த நோயாளிகளை 3 வகைகளாக பிரித்து சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 27,936 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20லட்சத்து 96ஆயிரத்து 516ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று ஒரேநாளில் 478பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,232ஆக அதிகரித்துள்ளது.

“கொரோனா நோயாளிகளை 3 வகைகளாக பிரித்து சிகிச்சை”  புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

இந்நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கான முழுமையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கொரோனா சிகிச்சைக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிட்டுள்ளது. அதில்,

“அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு, ஆக்ஸிஜன் அளவு 94 இருந்தால் அவர்கள் மருத்துவமனைக்கு வரக்கூடாது. மாறாக வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

“கொரோனா நோயாளிகளை 3 வகைகளாக பிரித்து சிகிச்சை”  புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

ஆக்ஸிஜன் அளவு 90 முதல் 94-க்குள் இருப்பின், அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஆக்ஸிஜன் அளவு 90-க்கு கீழாக இருப்பின், அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட வேண்டும்.

3 வகைகளாக நோயாளிகளைப் பிரித்து சிகிச்சையைத் தொடர வேண்டும்” என்று அறிவித்துள்ளது.