புதிய கல்வி கொள்கை ஜி.இ.ஆர் இலக்கை கடந்த ஆண்டே நெருங்கிய தமிழக அரசு!

 

புதிய கல்வி கொள்கை ஜி.இ.ஆர் இலக்கை கடந்த ஆண்டே நெருங்கிய தமிழக அரசு!

புதிய கல்விக் கொள்கையில் பள்ளியில் இருந்து கல்லூரியில் சேரும் மாவணவர்களின் எண்ணிக்கையை 50 சதவிகிதம் என்ற அளவுக்கு உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் அது தற்போது 49 சதவிகிதமாக உள்ளது என்று புள்ளிவிவரம் கூறுகிறது. இதற்கு காரணம் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள அ.தி.மு.க மற்றும் முன்பு இருந்த தி.மு.க, காங்கிரஸ் அரசுகள்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

புதிய கல்வி கொள்கை ஜி.இ.ஆர் இலக்கை கடந்த ஆண்டே நெருங்கிய தமிழக அரசு!
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு வரைவு கொள்கை வெளியான போது தமிழக அரசியல் கட்சிகள் தரப்பில் ஆட்சேபணை தெரிவிக்கப்பட்ட போது அவை அனைத்தும் ஏற்கப்பட்டு மாற்றம் செய்யப்படும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது. ஆனால், அவை அனைத்தும் ஏற்கப்பட்டதா என்று தெரியவில்லை. முழுமையான அறிவிப்பு வெளியாகாத நிலையில், இலவச கல்வி கிடைக்கும், தாய்மொழி வழிக் கல்வி கிடைக்கும், மொத்த ஜி.டி.பி-யில் 6 சதவிகித ஒதுக்கீடு என்று எல்லாம் பா.ஜ.க-வினரால் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

புதிய கல்வி கொள்கை ஜி.இ.ஆர் இலக்கை கடந்த ஆண்டே நெருங்கிய தமிழக அரசு!
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது புதிய 2000ம் ரூபாய் நோட்டில் சிப் இருக்கும், ஜி.பி.எஸ் கண்காணிப்பு இருக்கும் என்று கதைவிட்டது போலவே புதிய கல்விக் கொள்கை தொடர்பான தகவலை பரப்பி வருகின்றனர். அதே நேரத்தில் அந்தந்த மாநில மொழிக்கு ஏற்ப மத்திய அரசு நடத்தும் பள்ளிகள், சி.பி.எஸ்.சி பாடத்திட்ட பள்ளிகளில் எல்லாம் தாய்மொழி வழியில் கல்வி கற்பிக்கப்படும் என்று எங்காவது அறிவிப்பு உள்ளதா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கையின் இலக்காக கிராஸ் என்ரோல்மெண்ட ரேஷியோ (ஜி.இ.ஆர்) எனப்படும் உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையை 50 சதவிகிதம் என்ற அளவுக்கு உயர்த்துவது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் தற்போது அது 49 சதவிகிதமாக உள்ளது என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களை மேற்கோள்காட்டி பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்த ஆண்டு புள்ளிவிவரத்தில் மத்திய அரசின் இலக்கை தமிழகம் தாண்டியிருக்கவும் வாய்ப்புள்ளது என்கின்றனர் கல்வியாளர்கள்.

புதிய கல்வி கொள்கை ஜி.இ.ஆர் இலக்கை கடந்த ஆண்டே நெருங்கிய தமிழக அரசு!பள்ளிப் படிப்பை முடித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது இந்திய அளவில் 26 சதவிகிதமாக உள்ளது. புதிய கல்விக் கொள்கை மூலம் அதை 50 சதவிகிதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது தமிழகத்தில் தற்போது 49 சதவிகிதமாக உள்ளது. அப்படி இருக்கும்போது தமிழகத்தின் வெற்றிகரமான மாடலை பின்பற்றாமல் எதற்காக புதிய கல்விக் கொள்கையை கொண்டு வர வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றன.
சீனாவின் கிராஸ் என்ரோல்மெண்ட ரேஷியோ (ஜி.இ.ஆர்) 43 சதவிகிதம் தான். மலேசியாவில் 45, பக்ரைனில் 47, குவைத்தில் 55 சதவிகிதமாக உள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை அதிக கல்வியறிவு பெற்ற மாநிலமான கேரளாவில் கூட 37 சதவிகிதமாக உள்ளது. தெலங்கானா 36. ஆந்திரா 32, மகாராஷ்டிரா 32, கர்நாடகா 28, மாடல் மாநிலமான குஜராத்தில் 20 சதவிகிதம் என்ற அளவிலேயே உள்ளது.
தமிழகத்தில் அதிக அளவில் மாணவர்கள் உயர் கல்வி கற்க காமராஜர் கொண்டு வந்த கல்வி திட்டங்களும் அதற்குப் பிறகு தி.மு.க, அ.தி.மு.க என திராவிட ஆட்சியில் கொண்டு வரப்பட்ட, தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் சமூக நலத் திட்டங்களும்தான் காரணம் என்று சமூகவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.