திருவாரூரில் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை- முதல்வர்

 

திருவாரூரில் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை- முதல்வர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பணியிலிருந்தபோது திருவாரூரை சேர்ந்த ராணுவ வீரர் தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள புள்ளவராயன் குடிகாடு கிராமத்தை சேர்ந்த திருமூர்த்தி தனது பத்தொன்பதாவது வயதிலேயே இந்திய ராணுவத்தில் பணிக்கு சேர்ந்தார். 30 வருடங்கள் தொடர்ந்து காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் எல்லைப் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தார். இராணுவ வீரர் திருமூர்த்தி கடந்த 26ம் தேதி நள்ளிரவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அவர் வைத்திருந்த துப்பாக்கி எதிர்பாராத விதமாக வெடித்ததில் துப்பாக்கி பாய்ந்து உயிரிழந்தார். விரைவில் அவரது உடல் சொந்தவூருக்கு கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருவாரூரில் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை- முதல்வர்

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பாதுகாப்புப் படை வீரர் திருமூர்த்தி குடும்பத்தில் ஒருவருக்கு அரசுபணி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்து அதற்கான ஆணையையும் பிறப்பித்துள்ளார். உயிரிழந்த எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஹவில்தார் திருமூர்த்தி குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.