‘இந்த நேரத்தில்’ பேருந்துகள் இயக்கப்படும் – முழு விவரம் உள்ளே!

 

‘இந்த நேரத்தில்’ பேருந்துகள் இயக்கப்படும் – முழு விவரம் உள்ளே!

போக்குவரத்துக் கழக பேருந்துகள் பகலில் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இரவு நேர ஊரடங்கின்போது தனியார் மற்றும் பொது போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதியில்லை .வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைக்கு இரவில் தடை மற்றும் அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டும் தனியார் போக்குவரத்துக்கு அனுமதி உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

‘இந்த நேரத்தில்’ பேருந்துகள் இயக்கப்படும் – முழு விவரம் உள்ளே!

இந்நிலையில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு காரணமாகஅதிகாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. விரைவு பேருந்துகளில் ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகள் பயணம் தேதியை மாற்றி கொள்ளலாம் என்றும் தேதி மாற்றம் செய்யவில்லை என்றால் பேருந்து முன்பதிவு கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இந்த நேரத்தில்’ பேருந்துகள் இயக்கப்படும் – முழு விவரம் உள்ளே!

அதிகாலை 4 மணி தொடங்கி இரவு 8 மணிக்குள்ளாக சென்றடையும் வகையில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது பேருந்துகள் இயக்கப்படாது என்றும் சென்னை குறுகிய, தொலைதூர ஊர்கள், பிற ஊர்களுக்கு காலை 4 மணி முதல் 8 மணி வரை பேருந்துகள் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.