`டைம்முக்கு வேலைக்கு வரணும்; பணியை விரைந்து முடிக்கணும்!’- தமிழக அரசு ஊழியர்களுக்கு `செக்’

 

`டைம்முக்கு வேலைக்கு வரணும்; பணியை விரைந்து முடிக்கணும்!’- தமிழக அரசு ஊழியர்களுக்கு `செக்’

அரசு ஊழியர்கள் காலை 10.30 மணிக்கு அலுவலகம் வர வேண்டும் என்றும் நிலுவையில் உள்ள பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

`டைம்முக்கு வேலைக்கு வரணும்; பணியை விரைந்து முடிக்கணும்!’- தமிழக அரசு ஊழியர்களுக்கு `செக்’

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டது. தனியார் பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகின்றனர். சுகாதாரத்துறை, வருவாய்த்துறை பணியாளர்கள் தவிர்த்து அரசு ஊழியர்கள் பலர் வீட்டிலேயே இருந்தனர். இதனிடையே, அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக ஊரடங்கில் தளர்வை கொண்டு வந்தது தமிழக அரசு. கொரோனா பாதிப்பு உள்ள மாவட்டங்களில் இன்று வரை சில கட்டுப்பாட்டுடன் ஊரடங்கு தளர்வு இருந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊடங்கு அமலில் இருக்கிறது.

`டைம்முக்கு வேலைக்கு வரணும்; பணியை விரைந்து முடிக்கணும்!’- தமிழக அரசு ஊழியர்களுக்கு `செக்’

கடந்த மாதம் ஊரடங்கு தளர்வு முழுமையாக தளர்த்தினாலும், 50 சதவிகித பணியாளர்களுடன் அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் வேலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அதோடு, கிராமப்புறங்களில் 100 சதவிகித பணியாளர்களுடன் வேலை செய்யலாம் என்று தனியார் நிறுவனங்களுக்கு ஊரடங்கை முழுமையாக தளர்த்தியது தமிழக அரசு.

இந்த நிலையில், தமிழக அரசு அலுவலகங்களில் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை நாட்கள் என்று அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து வசதி இல்லாத ஊழியர்கள் அலுவலகங்களுக்கு சென்று வர பிரச்னை இருந்து வருகிறது. இதனிடையே, தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா அனைத்து அரசு அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கையில், “அரசு ஊழியர்கள் இன்று முதல் காலை 10.30 மணிக்குள் அலுவலகங்களுக்குள் வந்திருக்க வேண்டும். நிலுவையில் உள்ள கோப்புகளுக்கான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அரசு பணியாளர்கள் வருவதை அறிக்கை தயார் செய்து தினமும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறைக்கு அனுப்ப வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.