என் பெயரில் வதந்தி பரப்புவதா… எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை!

 

என் பெயரில் வதந்தி பரப்புவதா… எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை!

தன்னுடைய பெயரில் வதந்தி பரப்பப்பட்டு வருவதாகவும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரக்கைவிடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று பேச்சு கிளம்பியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே இப்படி கூறியதாக சமூக ஊடகங்களில் சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர்.
இது குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்திருந்தார். சேலத்தில் மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சியின்போது பேட்டி அளித்த போது முழு ஊரடங்கு என்று வெளியான தகவல் வதந்தி என்று கூறியிருந்தார். ஆனாலும், வதந்தி பரவுவது குறையவில்லை. இந்த நிலையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் இது தொடர்பாக பதிவிட்டுள்ளார்.

http://


அதில், “எனது பெயரில் ஊரடங்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக சில தவறான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த செய்தி முற்றிலும் தவறானதாகும். இந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இத்தகைய தவறான செய்திகள் வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.