இந்தியாவில் வணிகர்களுக்கு கடன் வழங்கும் கூகுள் – கூகுள் பே மூலமாக பெறலாம்

 

இந்தியாவில் வணிகர்களுக்கு கடன் வழங்கும் கூகுள் – கூகுள் பே மூலமாக பெறலாம்

டெல்லி: இந்தியாவில் வணிகர்களுக்கு கூகுள் பே மூலமாக கூகுள் நிறுவனம் கடன் வழங்க தொடங்கியுள்ளது.

இந்தியாவில் வணிகர்களுக்கு கூகுள் பே மூலமாக கூகுள் நிறுவனம் கடன் வழங்க தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் வெடிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சிறு வணிகங்களுக்கு உதவ பங்குதாரர் நிதி நிறுவனங்களுடன் கூகுள் நிறுவனம் இணைந்து இந்த கடனை வழங்க ஏற்பாடு செய்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் அருகிலுள்ள கடைகளை கண்டறிய பக்கத்தில் உள்ள கடைகள் (Nearby Stores) என்ற அம்சத்தையும் கூகுள் பே ஆப்-இல் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வணிகர்களுக்கு கடன் வழங்கும் கூகுள் – கூகுள் பே மூலமாக பெறலாம்

இந்த ஆண்டு தொடக்கத்தில் சென்னை, டெல்லி, ஹைதராபாத், மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டது. கூகுள் பே ஆப்-ஐ ஏற்கனவே 30 லட்சம் வணிகர்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஃபெடரல் வங்கி, எச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி போன்ற வங்கிகளுடன் கூட்டு சேர்ந்து கூகிள் பே மூலம் நுகர்வோருக்கு முன்பே அங்கீகரிக்கப்பட்ட கடன்களைப் பெறுவதற்கான வசதியை கூகுள் நிறுவனம் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்டில் சேர்த்தது.