இன்றைய கூகுள் டூடுல்: இந்திய திரைத்துறையால் போற்றப்பட்ட முதல் நடிகை சோரா சேகல்

இன்றைய கூகுள் டூடுல்: இந்திய திரைத்துறையால் போற்றப்பட்ட முதல் நடிகை சோரா சேகல்

ஒவ்வொரு நாளும் உள்ள சிறப்பானவற்றைக் கொண்டாடும் வகையில் கூகுள் டூடுல் வடிவமைப்பது கூகுளின் சிறப்பு. அந்த வகையில்,இன்றைக்குக் கூகுள் வெளியிட்டுள்ள சிறப்பு டூடுலில் இடம்பெற்றிருப்பவர் பாலிவுட் நடிகையும், நடன இயக்குநருமான சோரா சேகல். பாலிவுட், ஹாலிவுட், டிவி தொடர்கள் என தனக்கென தனிமுத்திரை படைத்த இவர் இந்திய திரைத்துறையால் போற்றப்பட்ட முதல் நடிகை என்று சொன்னால் அது மிகையாகாது.

இன்றைய கூகுள் டூடுல்: இந்திய திரைத்துறையால் போற்றப்பட்ட முதல் நடிகை சோரா சேகல்

உத்தரப்பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் 1962 ஆம் ஆண்டு லண்டனுக்கு குடிபெயர்ந்தார். பின்னர் அங்குள்ள தொலைக்காட்சி தொடர்களான “டாக்டர் ஹூ” மற்றும் 1984-ல் வெளியான “தி ஜுவல் இன் தி கிரவுனில் நடித்து சர்வதேச கவனம் பெற்றார். பின்னர் 1990 களின் மத்தியில், தாயகம் திரும்பிய இவர் 2002 ஆம் ஆண்டில், தனது 90 வது வயதில் “பெண்ட் இட் லைக் பெக்காம்” என்ற திரைப்படத்தில் நடித்து பாராட்டைப் பெற்றார்.

இன்றைய கூகுள் டூடுல்: இந்திய திரைத்துறையால் போற்றப்பட்ட முதல் நடிகை சோரா சேகல்

1946 ஆம் ஆண்டில் இதே நாளில், கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியான அவரது “நீச்சா நகர்” திரைப்படம் இந்தியாவின் முதல் சர்வதேச விமர்சன வெற்றியாக கருதப்பட்டது. அதை பாராட்டும் வகையிலேயே கூகுள் டூடுல் அவரின் புகைப்படத்தை முகப்பில் வைத்து பெருமைப்படுத்தியுள்ளது.

இன்றைய கூகுள் டூடுல்: இந்திய திரைத்துறையால் போற்றப்பட்ட முதல் நடிகை சோரா சேகல்

சோரா சேகலுக்கு 1998 ஆம் ஆண்டில் பத்மஶ்ரீ விருது, 2001 ஆம் ஆண்டில் காளிதாஸ் சம்மன் விருது, 2004 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமி விருது மற்றும் வாழ்நாள் சாதனைக்காக சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் விருது, 2010 ஆம் ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய விருதான பத்ம விபூஷண் விருது போன்றவை வழங்கப்பட்டன. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு தனது 102 ஆவது வயதில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.