”தொற்று அதிகம் உள்ள பகுதியா” ? – கூகுள் மேப்ஸில் தெரிந்துகொள்ளலாம்!

”தொற்று அதிகம் உள்ள பகுதியா” ? – கூகுள் மேப்ஸில் தெரிந்துகொள்ளலாம்!

கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை இனி கூகுள் மேப்ஸ் மூலமாகவே தெரிந்துகொள்ள முடியும். இத்தகைய வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளது.

”தொற்று அதிகம் உள்ள பகுதியா” ? – கூகுள் மேப்ஸில் தெரிந்துகொள்ளலாம்!

அதன்படி, ஒரு குறிப்பிட்ட பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் சராசரியாக ஒரு லட்சம் பேருக்கு எத்தனை பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவலை தெரிந்துகொள்ள முடியும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், அப்பகுதியில் தொற்று தொடர்ந்து அதிகரிக்கிறதா அல்லது குறைந்து வருகிறதா என்பதையும் மேப்ஸ் மூலமாக தெரிந்துகொள்ள முடியும் என்கிறது கூகுள்.

”தொற்று அதிகம் உள்ள பகுதியா” ? – கூகுள் மேப்ஸில் தெரிந்துகொள்ளலாம்!

இதைத்தவிர, ஒவ்வொரு பகுதிகளையும் பல்வேறு வண்ணங்களில் வகைப்படுத்தி காட்டி அதன் மூலம் எந்தெந்த பகுதிகளில் புதிதாக தொற்று பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் உள்ளனர் என்பதை சுட்டிக்காட்டும் வசதியும் கொண்டு வரப்பட உள்ளதாக கூகுள் நிறுவனம் அதன் பிளாக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

”தொற்று அதிகம் உள்ள பகுதியா” ? – கூகுள் மேப்ஸில் தெரிந்துகொள்ளலாம்!

கூகுள் மேப்ஸ் செயிலியில் ”கோவிட் இன்ஃபோ” என்ற ஆப்ஷனை கிளிக் செய்வதன் மூலமாக இந்த வசதியை பெறலாம் கூறி உள்ள கூகுள் நிறுவனம், இதன் மூலம், குறிப்பிட்ட பகுதிக்கு செல்லும் போது மக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் தங்களை தற்காத்துக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது. உலகெங்கிலும் கூகுள் மேப்ஸ் சப்போர்ட் செய்யும் 220 நாடுகளில் இந்த வசதி பயன்படுத்த கிடைக்கும் என கூகுள் தெரிவித்துள்ளது.

  • எஸ். முத்துக்குமார்