No சொல்லியும் குழந்தைகளை வளருங்கள் பெற்றோர்களே..#GoodParenting

 

No சொல்லியும் குழந்தைகளை வளருங்கள் பெற்றோர்களே..#GoodParenting

குழந்தைகளே இந்த உலகை ஜீவனுள்ளதாக மாற்றுகிறார்கள். சோகமான அல்லது இறுக்கமான சூழலைக்கூடக் குழந்தைகளே தங்களின் மழலைச் சொற்களால் மகிழ்ச்சியானதாக மாற்றுகிறார்கள். பெற்றோர்களின் எதிர்காலத்தைச் சுமப்பவர்களும் அவர்கள்தாம். ‘நான் டாக்டராக முடியல… எப்படியாவது. எம் பொண்ணை டாக்டராக்கிடணும்’ ‘கடைசி நேரத்தில் எனக்கு இன்ஜினியரிங் சீட் கிடைக்காமல் போயிடுச்சு… அதனால என் பையனை பத்தாவது படிக்கும்போதிலிருந்தே இன்ஜினியராக்க என்னென்ன செய்யணுமோ… செய்திட்டு வாரேன்’ என்று பலவிதமாகத் தம் குழந்தைகளின் எதிர்காலம் மீது கனவு காணும் பெற்றோர் ஏராளம்.

No சொல்லியும் குழந்தைகளை வளருங்கள் பெற்றோர்களே..#GoodParenting

குழந்தைகளின் மகிழ்ச்சியான எதிர்காலத்திற்கு எதையும் நேர்மறையாகச் சிந்திக்க வேண்டும்… நேர்மறையாகச் செயல்பட வேண்டும் என்று சொல்லி வளர்ப்பவர்களே அதிகம். இன்னும் பல பெற்றோர்கள் குழந்தைகள் என்ன கேட்டாலும் நோ சொல்லாது வாங்கிக்கொடுப்பவர்கள் உண்டு. அதற்காகத் தம் வருமானதிற்கு அதிகமான செலவு செய்பவர்களை நம் கண்முண் பார்க்க முடியும்.

உண்மையில், குழந்தைகள் தங்கள் ஆசைப்பட்டதைக் கேட்பார்கள். ஆனால், எல்லாவற்றிற்கும் யெஸ் சொல்லி வளர்த்தால் சரியான பெற்றோராக நீங்கள் இருக்கமாட்டீர்கள். சில குறிப்பிட்ட விஷயங்களுக்கு உங்கள் குழந்தைகளை No சொல்லி வளர்க்க தயாராகுங்கள். ஏனெனில், உங்கள் குழந்தைகள் பார்த்த உலகம் மிகச் சிறியது; கற்பனையால் நிறைந்தது. பெற்றோர்கள் தங்கள் அனுபவத்தால் கண்ட உலகம் யதார்த்தமானது. எனவே, குழந்தைகளின் விருப்பங்கள் சிலவற்றிற்கு No சொல்லுங்கள். எதெற்கெல்லாம் No சொல்லலாம் என்பதைப் பார்ப்போம்.

The Hows And Whys Of Saying No To Your Child – The Kurdish Mother

1. மொபைல்:

என்ன வயது குழந்தையாக இருந்தாலும் மொபைல் கேட்பது வெகு சாதாரணமான சம்பவமாகி விட்டது. ஆனால், மொபைலைக் கொடுக்க மாட்டேன் என்று சொல்ல முடியாது. ஏனெனில், குழந்தையின் முன் பெற்றோர் மணிக்கணக்காக மொபைலில் நேரம் செலவழித்து, அக்குழந்தைக்கு மொபைல் மீது பெரிய ஈர்ப்பை அளித்திருப்போம். அதனால், மொபைல் கொடுக்கலாம். ஆனால், இன்டெர்நெட்டை ஆஃப் செய்துகொடுக்கலாம். குழந்தை நெட் வேண்டும் கேட்டால் தயங்காது No சொல்லுங்கள். மொபைல் பயன்படுத்த குறிப்பிட்ட நேரம் மட்டுமே என்று வரையறுத்துக்கொள்வது நல்லது. குழந்தைக்கு மட்டுமல்ல… பெற்றோர்களுக்கும்தான்.

No சொல்லியும் குழந்தைகளை வளருங்கள் பெற்றோர்களே..#GoodParenting

2. ஃபாஸ்ட் ஃபுட்:

உடலை ஆரோக்கியமாகக் காத்துக்கொள்வதை விடவும் பெரிய செல்வம் ஏதுமில்லை என்பதைத்தான் இந்தக் கொரோனா காலம் உணர்த்தி வருகிறது. ஆனால், உடல்நிலையைக் கெடுப்பதில் முதன்மையான இடத்தில் இருப்பவை துரித உணவுகளே. மாதத்தில் ஒரு முறை அல்லது இரு முறை என்றால் குழந்தைகளின் விருப்பத்துக்காக ஒத்துக்கொள்ளலாம். ஆனால், தினமும் நூடுல்ஸ் இருந்தால்தான் சாப்பிடுவேன் எனக் கேட்டால் கட்டாயம் No சொல்லுங்கள். முதலில் அடம்பிடிப்பார்கள். பிறகு அவர்களே புரிந்துகொள்வார்கள்.

No சொல்லியும் குழந்தைகளை வளருங்கள் பெற்றோர்களே..#GoodParenting

3. விலை உயர்ந்த பொருள்கள்:

பெற்றோர் சம்பாதிப்பதே குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றத்தான் என்று நினைப்பதில் தவறில்லை. ஆனால், மிக விலையுயர்ந்த பொருள்களைக் கேட்டு, அதை வாங்கித் தருவது என்பது சரியான வழிமுறையல்ல. ஏனெனில், ஒரு பொருளைக் கேட்பதற்கு முன் அக்குழந்தை இது தேவையா என்பதை யோசிப்பதுபோலவே இவ்வளவு விலை உயர்ந்தது தேவையா என்றும் யோசிக்க வேண்டும். மேலும், விலை உயர்ந்த பொருள் அணிந்திருப்பதாலேயே உங்கள் குழந்தைக்கு வெளியிலிருந்து ஆபத்து வரக்கூடும். எனவே, மிகவும் விலை உயர்ந்த பொருள் கேட்டால், உங்கள் குழந்தையின் பாதுகாப்பையும் மனத்தில் கொண்டு No சொல்லுங்க.

No சொல்லியும் குழந்தைகளை வளருங்கள் பெற்றோர்களே..#GoodParenting

4. மரியாதையின்றி அழைக்க:

குழந்தைகளுடன் நட்புடன் பழகுவது மிகவும் அவசியம். அப்போதுதான் அவர்கள் தங்கள் மகிழ்ச்சியான தருணங்களையும் பிரச்னைகளையும் வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்வார்கள். ஆனால், சில பெற்றோர்கள் தங்கள் வீட்டில் வயது மூத்தவர்களைப் பெயர் சொல்லியும் மரியாதை குறைவாகவும் அழைப்பதைக் கண்டுக்கொள்ளாமல் இருப்பார்கள். அப்பழக்கம் வெளியிலிருந்து வரும் நபர்களை அழைப்பதிலும் தொடரும் என்பதால் அப்பழக்கத்துக்கு No சொல்ல தயக்கம் காட்டாதீர்கள்.

 

5. வேலையில் பால் பேதம் இல்லை:

அநேகமாக எல்லா வீடுகளிலுமே பெண் குழந்தைகளே வீட்டு வேலைகளான சுத்தப்படுத்துதல், பாத்திரம் கழுவதல் உள்ளிட்டவற்றைச் செய்கிறார்கள். இந்தப் பழக்கமே எதிர்காலத்தில் ‘இது பொம்பளைங்க செய்ற வேலை’ மனநிலையை ஆண் குழந்தைகளுக்குக் கொடுக்கிறது. பலர் ஆண் குழந்தை இப்போதே இதெல்லாம் நான் செய்ய மாட்டேன் என்று சொல்லும் பழக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களின் பழக்கத்திற்கு No சொல்லுங்க. வேலையில் ஆண், பெண் பேதமில்லை என்று சொல்லி வளருங்கள்.

GOD ON MEN DOING DISHES – GOD'S HOTSPOT

குழந்தை வளர்ப்பு என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் மாறக்கூடிய நடைமுறைகள் கொண்டது. எனவே உங்கள் குழந்தையின் பிரதான செயல்களில் எதெல்லாம் No சொல்ல வேண்டுமோ அவற்றிற்கு எவ்வித தயக்கமும் கொள்ளாமல் No சொல்லுங்கள்.