பப்ஜி கேம் பிரியர்களுக்கு குட் நியூஸ்!- பப்ஜிக்கு மாற்றாக வருகிறது ஃபாவ்ஜி கேம் !

பப்ஜி கேம் பிரியர்களுக்கு குட் நியூஸ்!- பப்ஜிக்கு மாற்றாக வருகிறது ஃபாவ்ஜி கேம் !

பப்ஜி கேமுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அதற்கு மாற்றாக ஃபாவ் ஜி என்ற புதிய கேம் வரும் அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

பப்ஜி கேம் பிரியர்களுக்கு குட் நியூஸ்!- பப்ஜிக்கு மாற்றாக வருகிறது ஃபாவ்ஜி கேம் !

பல இளைஞர்களை தன்வசம் கட்டிப்போட்டு வைத்திருந்த பப்ஜி கேமுக்கு மத்திய அரசு கடந்த 2ம் தேதி தடைவிதித்தது. இதையடுத்து அது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த முடிவால் கேம் பிரியர்கள் கடும் அதிர்ச்சியும் சோகமும் அடைந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஃபாவ் ஜி என்ற புதிய கேமை பெங்களூரை சேர்ந்த என்கோர் கேம்ஸ் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

பப்ஜி கேம் பிரியர்களுக்கு குட் நியூஸ்!- பப்ஜிக்கு மாற்றாக வருகிறது ஃபாவ்ஜி கேம் !

பாலிவுட் நடிகர் அக்‌ஷ்ய்குமாருடன் இணைந்து இந்த புதிய கேம் அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பியர்லெஸ் அண்ட் யுனெடெட் கார்ட்ஸ் ( FAU-G ) என்ற பெயரில் அறிமுகமாகும் இந்த கேம், ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமான ஆக்‌ஷன் கேமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஜூன் மாதத்தில் எல்லைப்பகுதியான லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில், இந்தியா – சீனா இடையே நடந்த சண்டை, இதில் ஒரு லெவலாக சேர்க்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் நிறுவனர் விஷால் கோண்டால் தெரிவித்தார்.

பப்ஜி கேம் பிரியர்களுக்கு குட் நியூஸ்!- பப்ஜிக்கு மாற்றாக வருகிறது ஃபாவ்ஜி கேம் !

மேலும் எல்லைப்போரில் வீர மரணம் அடையும் ராணுவ வீரர்களுக்கு உதவிட டிரஸ்ட் ஒன்றை நடிகர் அக்‌ஷய்குமார் அமைத்து வருவதாக கூறிய கோண்டால், கேம் மூலம் கிடைக்கும் வருவாயில் 20 சதவீதத்தை அந்த டிரஸ்ட் மூலம் வீரமரணம் அடையும் ராணுவ வீரர்களுக்கு உதவிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த எல்லைச்சண்டைக்கு பிறகு, சீனாவுக்கு எதிராக பல அதிரடிகளை மேற்கொண்டு வரும் இந்தியா, டிக்டாக், பப்ஜி உள்ளிட்ட சீன செயலிகளுக்கும் தடைவிதித்தது. இந்நிலையில் கால்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற சீனாவுடனான எல்லை சண்டையை ஒரு லெவலாக கொண்ட இந்திய தயாரிப்பு கேம், பப்ஜிக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-எஸ். முத்துக்குமார்