உங்க குழந்தை நல்லா வரணும்னா ,இதையெல்லாம் சொல்லாதிங்க

 

உங்க குழந்தை நல்லா வரணும்னா ,இதையெல்லாம் சொல்லாதிங்க

பெற்றோரின் வளர்ப்பை குழந்தைகளின் நடவடிக்கைகள் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று சொல்வார்கள். அது உண்மை தான். ஏனெனில் குழந்தைகள் குறும்பு செய்தாலும் சரி, அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் நடந்து கொண்டாலும் சரி, அதற்கு முதலில் சொல்வது பெற்றோரின் வளர்ப்பு என்று தான். அந்த வகையில் அனைத்து பெற்றோர்களுமே தனது குழந்தை அனைவரும் அதிசயப்படும் வகையில் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

அதற்கு முதலில் அனைத்து பெற்றோர்களும் செய்ய வேண்டியது, குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே ஒருசில நல்ல பழக்கங்களை பின்பற்ற வைக்க வேண்டும். அதற்காக குழந்தைகளை வற்புறுத்தி செய்ய வைக்கக்கூடாது. ஏனெனில் அவ்வாறு செய்தால், குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மீது வெறுப்பு வந்துவிடும். எனவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களைச் சொல்லிக் கொடுக்கும் பொழுதே, அதற்கான நன்மைகளையும் வெளிப்படையாக புரியுமாறு சொன்னால், குழந்தைகள் புரிந்து கொண்டு, அதனை விருப்பத்துடன் பின்பற்றுவார்கள்.

உங்க குழந்தை நல்லா வரணும்னா ,இதையெல்லாம் சொல்லாதிங்க

குழந்தை பருவத்திற்கும், டீன் ஏஜ் பருவத்திற்கும் இடைப்பட்ட வயது கொண்ட குழந்தைகளை வளர்ப்பது பெற்றோருக்கு சவாலான விஷயமாக இருக்கும். ரெண்டுங்கெட்டான் வயதுஎனப்படும் இந்த பருவத்தில் அமைதியாகவே இருக்க மாட்டார்கள். ஏதாவது சேட்டை செய்து கொண்டிருப்பார்கள். கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுப்பார்கள். சில பெற்றோர் குழந்தைகளின் செயல்பாடுகளை சமாளிக்க முடியாமல் சட்டென்று கோபம் கொள்வார்கள். அது தவறானது. இந்த வயதில் குழந்தைகளிடம் இயல்பாக வெளிப்படும் சுபாவம் இது. அதனை கட்டுப்படுத்த முயற்சிப்பது அவர்களின் குணாதிசயத்தையும், ஆளுமை திறனையும் பாதிப்புக்குள்ளாகிவிடும். குழந்தைகள் செய்யும் சேட்டைகள், குறும்புகள், தவறுகள் அனைத்திற்கும் பெற்றோர் பதிலளிக்க வேண்டும். எது சரி, எது தவறு என்பதை விளக்கி புரியவைக்க வேண்டும். இந்த வயது குழந்தைகளிடம் சொல்லக்கூடாத விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

* குழந்தைகள் சேட்டை செய்யும்போதெல்லாம் அடி வாங்கப்போறேஎன்று அதட்டுவதும், அடிப்பதும் கூடாது. அன்பாக எடுத்துச்சொல்லி புரியவைக்க வேண்டும். கடுமை காட்டுவது குழந்தைகள் மனதில் தவறான புரிதலை ஏற்படுத்திவிடும். பெற்றோர் தங்களை வெறுப்பதாக நினைத்து தனிமையில் இருக்க பழகிவிடுவார்கள். அதற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது.

* தனது சகோதரன், சகோதரியுடன் சண்டை போடும் சுபாவம் இந்த பருவத்தில் அதிகரிக்கும். எதற்கெடுத்தாலும் சண்டை போடுவார்கள். அப்போது யாராவது ஒருவர் கடுமையாக திட்டிவிட்டால் சட்டென்று மனமுடைந்து போய்விடுவார்கள். அழவும் செய்வார்கள். தாங்கள் செய்யும் தவறுகள், முயலாமை, அச்சம் என குழந்தைகள் அழுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதற்காக அழுமூஞ்சு. எதற்கெடுத்தாலும் அழுது கொண்டிருக்கிறாய்என்று கூறி திட்டக்கூடாது. அழுவது நல்ல பழக்கமல்ல என்று கூறி அதில் இருந்து மீண்டு வருவதற்கு பெற்றோர் தைரியமும், தன்னம்பிக்கையும் அளிக்க வேண்டும்.

* ‘நீ எதற்கும் பிரயோஜனம் இல்லாதவன், கையாலாகாதவன்என்பது போன்ற வார்த்தைகளை கூறுவதை தவிர்த்துவிட வேண்டும். அவை அவர்களின் தன்னம்பிக்கையை சிதைத்து விடும். தாங்கள் எதற்குமே உதவாத நபர்என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள். இந்த வயதில் குழந்தைகள் தவறுகள் செய்வது, தோல்வி அடைவது எல்லாம் சகஜம். அதில் இருந்து மீண்டு வருவதற்கு பெற்றோர்கள்தான் பக்கபலமாக இருக்க வேண்டும்.

* தங்களது சகோதரன், சகோதரியுடனோ, மற்ற குழந்தை களுடனோ எதற்கெடுத்தாலும் ஒப்பிட்டு பேசுவதை தவிர்க்க வேண்டும். அது அவர்களுடைய சுய மரியாதைக்கு பங்கம் விளைவித்துவிடும்.குழந்தைகளுக்கு தவறாமல் கற்றுக் கொடுக்க வேண்டியவைகளில் முக்கியமானது ‘நன்றி’ மற்றும் ‘தயவு செய்து’ போன்ற மரியாதையான வார்த்தைகள் தான். எனவே இதனை மறக்காமல் சொல்லிக் கொடுக்க வேண்டும்.சிறுவயதில் இருந்தே அவர்களுக்கு பொறுப்புக்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அதிலும் அவர்களுக்கு செலவிற்கு பணம் பொடுத்தால், அதை சேமித்து வைத்து, தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்று சொல்லி பழக்க வேண்டும். இதனால் பிற்காலத்தில் அவர்களுக்கு சேமிக்கும் பழக்கம் அதிகரித்து, நல்ல பொறுப்புள்ள மனிதனாக இருப்பார்கள்.