39 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் கடத்தல் – சென்னையில் பிடிபட்டது

 

39 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் கடத்தல் – சென்னையில் பிடிபட்டது

தங்கம் கடத்தல் சமீபமாக அதிகரித்து வருகிறது. தங்கம் விலை தாறுமாறாக ஏறுவதும் இதற்கு முக்கியக் காரணமாக இருக்கக்கூடும். சென்னையில் 39 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தங்கம் பிடிபட்டது.

துபாயில் இருந்து ஃபிளை துபாய் விமானம் எஃப் இசட் 8517 மூலம் சனிக்கிழமை அன்று சென்னை வந்த காஜா மைதீன், 33, மற்றும் முகமது ஷேர்கான், 21, ஆகியோர் தங்கம் கடத்தி வருவதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து சுங்க வருகைக் கூடத்தின் வெளியேறும் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களைச் சோதனை செய்து பார்த்தபோது தலா 232 கிராம் எடையுள்ள இரண்டு தங்க கட்டிகள் கண்டறியப்பட்டன.

39 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் கடத்தல் – சென்னையில் பிடிபட்டது

மேலும், இருவரும் தங்களது கால் சட்டைப் பைகளில் ஒளித்து வைத்திருந்த தங்க துண்டும் (31 கிராம்) பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் ரூபாய் 27.4 லட்சம் மதிப்புடைய 526 கிராம் தங்கம் சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.

சனிக்கிழமை இரவு அன்று நடந்த இன்னும் இரு சம்பவங்களில், துபாயில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஐ எக்ஸ் 1644 விமானத்தில் வந்த திருச்சியை சேர்ந்த அப்துல் ஜலீல் முகமது அலி, 33, மற்றும் சென்னையை சேர்ந்த முகமது அப்துல் அமீது, 39, ஆகியோர் தங்கம் கடத்தி வருவதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து தடுத்து நிறுத்தப்பட்டனர்.

39 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் கடத்தல் – சென்னையில் பிடிபட்டது

அவர்களைச் சோதனை செய்து பார்த்தபோது அவர்களது கால் உரைகளில் இரண்டு பொட்டலங்கள் தங்க பசையும், அவர்களது கால் சட்டைப் பைகளில் இருந்து தங்க சங்கிலிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் ரூபாய் 12.16 லட்சம் மதிப்புடைய 232 கிராம் தங்கம் சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.

மொத்தம் ரூபாய் 39.56 லட்சம் மதிப்புடைய 758 கிராம் தங்கம் சுங்க சட்டம் 1962-இன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது. இதுபோல சென்னை விமான நிலையத்தில் அடிக்கடி நடப்பதால் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்வதைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.