‘தொடர்ந்து ஒரு வாரமாக தங்கம் விலையில் வீழ்ச்சி’ – இன்றும் குறைவு!

 

‘தொடர்ந்து ஒரு வாரமாக தங்கம் விலையில் வீழ்ச்சி’ – இன்றும் குறைவு!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ளது.

பொதுமுடக்கத்தின் போது தங்கக் காசுகளின் மீதான முதலீடுகள் அதிகரித்ததால், தங்கம் விலை கிடுகிடுவென ஏற்றத்தை சந்தித்தது. எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை சந்தித்த தங்கம் விலை, குறையுமா? அல்லது அதே நிலையில் நீடிக்குமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் வெகுவாக எழுந்தது. பொதுமுடக்கம் நீடித்தால் தங்கம் விலை உயரும் என்றும் தளர்வுகள் அளிக்கப்பட்டால் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது என்றும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதன் படியே, ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் தங்கம் விலை கணிசமாக குறைந்து வருகிறது.

‘தொடர்ந்து ஒரு வாரமாக தங்கம் விலையில் வீழ்ச்சி’ – இன்றும் குறைவு!

இந்த நிலையில் சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.4,574க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.36,592க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.64.70க்கும் ஒரு கிலோ ரூ.64,700க்கும் விற்பனையாகிறது.